பட்டமளிப்பு விழாவில் இளம்பெண் அடித்த குட்டிக்கரணம்! வைரல் புகைப்படம்
இரவு, பகல் பாராது கஷ்டப்பட்டு படித்துவிட்டு அதற்கான பலனை பெறும்பொழுது மனம் இன்பத்தில் குதூகலிக்கும்.
அதுவும் பல்கலைக்கழகம் சென்று படித்து முடித்தவர்கள் வீடுகளுக்குச் சென்றால், அங்கே தலையில் பட்டதாரி என்ற அடையாளத்துக்கான தொப்பி மற்றும் கையில் சுருட்டிய சான்றிதழுடன் புகைப்படங்களைப் பார்க்கலாம்.
வாழ்வின் அழகிய தருணங்களில் பட்டம் வாங்குவதும் ஒன்று. அந்த பட்டம் வாங்கும் தருணத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார் சீனாவைச் சேர்ந்த மாணவி சென் யினிங்.
ஆம், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது, பட்டம் வாங்குவதற்காக பல மாணவிகள் வரிசையில் காத்திருக்கையில், மேற்குறித்த சீன மாணவி பட்டம் வாங்கச் சென்ற தருணத்தில், மேடையில் திடீரென குங்பூ பாணியில் குட்டிக்கரணம் அடித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத பட்டம் வழங்கயிருந்த கல்வியாளர்கள் சிரித்தபடியே மாணவிக்கு பட்டத்தை வழங்கியுள்ளனர்.
இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் மாணவியை பாராட்டி வருகின்றனர்.