பூங்காவை சுற்றி பார்த்த தம்பதிகளுக்கு அடித்த அதிர்ஷ்ட கல்! இதன் மதிப்பு மட்டும் எவ்வளவு தெரியுமா?
பூங்காவில் மின்னும் தங்கத்தை கண்டுபிடித்த தம்பதிகள் அதை அதிகாரிகளிடம் ஒப்படத்த தகவல் பாராட்டுக்களை பெற்றுள்ளது. அமெரிக்காவின் Northern California-வை சேர்ந்தவர் Noreen மற்றும் Michael Wredberg தம்பதிகள்.
இவர்கள், அமெரிக்காவின் இரண்டு தேசிய பூங்காவிற்கு செல்ல வேண்டும் என ஆசைப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த செப்டம்பர் மாதம் Arkansas-வில் இருக்கும் தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளனர்.
இதனிடையே, Crater of Diamonds State Park அமெரிக்காவில் இருக்கும் Arkansas-ன் பைக் கவுண்டியில் உள்ள 911 ஏக்கர் கொண்ட ஒரு மாநில பூங்காவிற்கு சென்றுள்ளனர். இந்த பூங்காவில் மட்டும் தான், பொதுமக்கள் அணுகும் வைரம் இருக்கும் பூங்காவாகும்.
இந்த பூங்காவை சுற்றிபார்க்க மட்டுமே 40 நிமிடத்தை செலவு செய்துள்ளனர். அப்போது அவர்கள் சுற்றி பார்க்கும்போது தரையில் ஏதோ மினிமினுப்பதை கண்டுள்ளார். மஞ்சள் நிறத்தில் இருந்த அந்த கல் போன்ற பொருளை எடுத்து பார்த்தபோது அது மிகவும் பிரகாசமாக மின்னியுள்ளது.
இதன்பின்னர், அந்த தம்பதிகள் அந்த கல்லை பூங்காவில் இருக்கும் வைரம் தானா என்று உறுதி செய்யும் மையத்திற்கு எடுத்து சென்று அங்கிருக்கும் அதிகாரிகளிடம் கொடுத்து சோதித்து பார்த்த போது, அது உண்மையில் ஒரு வைரம் என்பதை உறுதி செய்தனர்.
இந்நிலையில், இந்த வைரம் இன்றைய தேதியில் சுமார் 15,330 டாலர் விலை போகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில், சுமார் 11,45,477.34 ரூபாய்.....
மேலும், இந்த ஆண்டு மட்டும் இதேப்போல் பார்வையாளர்களால் 258-வது வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்... மேலும் இந்த வைரத்திற்கு லூசி என தம்பதிகள் பெயர் வைத்துள்ளனர்.