ஐஐடி கான்பூர் தேர்வு... சாதித்து காட்டிய பெட்ரோல் பங்க் ஊழியரின் மகள் சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
பெட்ரோல் பங்கில் வேலை செய்த ஊழியரின் மகள் ஐஐடி கான்பூரில் படிக்க தேர்வாகியுள்ள சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
கேரளா மாநிலம், பையனூரில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்பும் வேலை செய்து வருகிறார் ராஜகோபாலன். இவரின் மகள் ஆர்யா, இவர் ஐஐடியில் எம்.டெக் படிக்க தேர்வாகியுள்ளார். இதற்கு இணையதளத்தில் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து டிவிட்டரில் பதிவிட்ட மத்திய பெட்ரோல் தறை அமைச்ச் ஹர்தப் சிங் புரி, “ஆர்யா ராஜகோபாலன் ஐஐடியில் பயில தேர்வானது அவரது தந்தைக்கு மட்டுமின்றி தேசிய ஆற்றல் துறை சார்ந்த அனைவருக்கும் பெருமை தேடி தந்துள்ளதாக பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆர்யாவின் தந்தை ராஜகோபாலன் இந்தியன் ஆயில் நிறுவனத்திலேயே என் மகள் உயர்பதவி பெற்றால் சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.
மேலும், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யாவும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியன் ஆயிலின் வாடிக்கையாளர் உதவியாளர் ராஜகோபாலனின் மகள் ஆர்யாவின் எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்து கொள்கிறேன்.
ஆர்யா ஐஐடி கான்பூரில் நுழைவதன் மூலம் எங்களை பெருமைப்படுத்தியுள்ளார். ஆர்யாவுக்கு நல்வாழ்த்துக்கள் என டுவிட் செய்து உள்ளார். இவருக்கு பல தரப்பு பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Heartwarming indeed.
— Hardeep Singh Puri (@HardeepSPuri) October 6, 2021
Arya Rajagopal has done her father Sh Rajagopal Ji & indeed all of us associated with the country’s energy sector immensely proud.
This exemplary father-daughter duo are an inspiration & role models for Aspirational New India.
My best wishes.@IndianOilcl https://t.co/eiU3U5q5Mj pic.twitter.com/eDTGFhFTcS