குழந்தையின் தொப்புள் கொடியை தாயத்தாக அணிவது ஏன்? பலரும் அறியாத தகவல்
பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடியில் தாயத்து செய்து குழந்தைகளுக்கு அணிவிப்பதற்கான மருத்துவ காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வசம்பு
இன்றும் கிராமங்களில் குழந்தைகளின் தொப்புள் கொடியினை தாயத்தாக செய்து அணிவித்திருப்பார்கள். வசம்பு மூலிகையும் சேர்க்கப்படுவதுண்டு.
வசம்பு குழந்தையின் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கும். மேலும் இதனை கையில் கட்டிவிடவும் செய்வார்கள். இவை நெஞ்செரிச்சல், செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு வீக்கம், வயிற்றுப்போக்கு இவற்றினை சரி செய்கின்றது.
இதே போன்று தொப்புள் கொடியில் தாயத்தை போடுவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்வோம்.
தொப்புள் கொடி
பிறந்த குழந்தைகளின் வயிற்றை நன்றாக பார்த்தால் தெரியும். அவர்களின் வயிற்றில் சிறிதளவு தொப்புள் கொடி ஒட்டியிருக்கும்.
காலப்போக்கில் அதுவே காய்ந்து உதிர்ந்துவிடும். இந்த உலர்ந்த தொப்புள் கொடியினை தாயத்தில் வைத்து அதனை இடுப்பு அல்லது கழுத்தில் குழந்தைகளுக்கு கட்டிவிடுவார்கள்.
ஒவ்வொரு குழந்தைக்கும் கொடியின் நீளம் மாறுபடும். சுமாராக 20 முதல் 24 அங்குலங்கள் தொப்புள் கொடி இருக்கலாம். ஆனால் சில குழந்தைகளுக்கு அதைவிட நீளமாக இருக்கும்.
சிலர் வித்தியாசமாக தொப்புள் கொடியை உலரவிட்டு தூளாக்கி தாயத்துக்குள் போட்டுவிடுவார்கள்.
காரணம் என்ன?
குழந்தை வளர்ந்த பின்பு ஏதெனும் கொடிய வியாதி தாக்கினால் அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, தாயத்திற்குள் வைத்திருக்கும் தொப்புள் கொடி பொடியை எடுத்து கொடுப்பார்களாம்.
குறித்த நோய் சரியாகிவிடுவதாகவும் இதனாலேயே குழந்தைகளுக்கு இவ்வாறு தாயத்து அணிந்துள்ளனர்.
சில ஆராய்ச்சியாளர்கள் நரம்பியல் கோளாறுகள், திசு சேதம் போன்ற இரத்த நோய்கள் உள்பட பல நோய்களுக்கு சிகிச்சையளிக்க தொப்புள் கொடி ஸ்டெம் செல்கள் பயன்படுவதாக கூறுகின்றனர்.
குழந்தைகள் வளர்ந்த பின்பு அவர்களுக்கு புற்றுநோய் மாதிரியான கொடிய நோய்கள் ஏற்பட்டால் இதிலுள்ள மூலச் செல்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கமுடியுமாம்.
பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் உள்ள தொப்புள் கொடி ரத்தம் (Umbilical cord blood) அதிகளவு மூலச்செல்களை கொண்டுள்ளன. இதில் இருந்து புதிய உடலின் உறுப்புக்களை உருவாக்க முடியும்.
ஆகவேதான் பிறக்கும் குழந்தையிடம் இருந்து ஸ்டெம் செல் என சொல்லப்படும் ரத்த ஆதார செல்லை தொப்புள் கொடியில் இருந்து எடுத்து சில மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் தொப்புள் கொடியை சேமித்து வைக்கிறார்கள்.
பிறந்த குழந்தையிடம் இருந்து தொப்புள் கொடியை எடுத்து சேமிக்க அக்குழந்தையின் பெற்றோரிடம் அனுமதி கேட்டு வைப்பதுடன், இதற்காக பணம் செலுத்தவும் செய்ய வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |