அர்ஜுன் மகளை காதலிக்கும் முன்... கவர்ச்சி நடிகையுடன் காதல்? வைரல் புகைப்படங்கள்
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா.
பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா அர்ஜுன். அதன்பின்னரும் சினிமா வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இவருக்கும், உமாபதி ராமையாவுக்கு திருமணம் என கூறப்பட்டது.
சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமையா கலந்து கொண்ட போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், இது நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அர்ஜுன், அதில் உமாபதியின் நடவடிக்கைகள் அர்ஜுனுக்கு பிடித்துப் போகவே மகளின் காதலுக்கு பச்சை கொடி காட்டியதாகவும் சொல்லப்படுகிறது.
இதற்கிடையே உமாபதி நடிகை யாஷிகா ஆனந்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |