பெண் பிள்ளைகளின் எலும்பை வலுப்படுத்த வேண்டுமா? இந்த ரெசிபி போதும்
வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நாம் உணவு கொடுக்கும் போது அதில் ஆரோக்கியம் மும்மடங்கு இருக்க வேண்டும். பொதுவாக சத்தான உணவுகள் கொடுப்பதில் உழுந்து பெண் பிள்ளைகளின் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கால்சியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எனவே உழுந்து பொடி சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் துருவல் – ஒரு கப் (இதை ட்ரையாக நல்ல ஈரப்பதம் போகும் வரை வறுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்)
- எண்ணெய் – ஒரு ஸ்பூன்
- வர மல்லி விதைகள் – ஒரு டேபிள் ஸ்பூன்
- கருப்பு உளுந்து – 2 டேபிள் ஸ்பூன்
- வர மிளகாய் – 5 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப இதை அதிகம் அல்லது குறைவாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்)
- சீரகம் – அரை ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிய கட்டி (தூளாக இருந்தால் கால் ஸ்பூன்)
- புளி – சின்ன நெல்லிக்காய் அளவு (வறுக்கக்கூடாது) உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து வரமல்லியை முதல் வறுத்துக்கொள்ளவேண்டும். சிறிது நேரத்திற்குப் பின் அதனுடன் கருப்பு உளுந்து சேர்த்து வறுக்கவேண்டும்.
அடுத்து வர மிளகாயை சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக சீரகம், பெருங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக வாசம் வரும் வரை வறுத்து வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலில் சேர்த்து நன்றாக ஆறவைத்துவிடவேண்டும்.
ஆறிய பின் காய்ந்த மிக்ஸியில் வறுத்த பொருட்கள், புளி மற்றும் உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். இதை ஒரு காற்றுப் புகாத போத்தலில் அடைத்து வைத்துக்கொண்டால்ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
சாதம் செய்ய தேவையான பொருட்கள்
- உதிரியான வடித்த சாதம் – ஒரு கப்
- நெய் – ஒரு ஸ்பூன்
- கடுகு – ஒரு ஸ்பூன்
- உளுந்து – ஒரு ஸ்பூன்
- சீரகம் – கால் ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- பச்சை மிளகாய் – 2
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
- பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
- தயார் செய்து வைத்துள்ள பொடி – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் சாதத்தை உதிரியாக வடித்து, தனியாக ஆறவைத்துக்கொள்ளவேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் கடுகு, உளுந்து, சீரகம், வரமிளகாய், பச்சை மிளகாய் (இரண்டையும் முழுதாக சேர்த்துக்கொள்ளவேண்டும்)
கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும்.
தயார் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி, அதில் சாதத்தையும் சேர்த்து கிளறவேண்டும். கிளறி இறக்கினால் சூப்பர் சுவையான உளுந்துபொடி சாதம் தயார். தேவைப்பட்டால் கடலையை வறுத்து மேலே தூவிக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |