மாதவிடாய் காலத்தில் கை கொடுக்கும் களி! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக பெண்களுக்கு அடிக்கடி சத்தான மற்றும் இரத்தத்தை ஊற வைக்கும் உணவுகளை கொடுக்க வேண்டும் என நமது வீட்டிலுள்ளவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். அது ஏன் என தெரிந்து கொள்ள சிலருக்கு ஆர்வம் இருக்கும்.
இதன்படி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிகமான இரத்தப் போக்கு இருக்கும். இதனால் அவர்களின் உடல் நிலை மோசமாவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.
இதனை “வரும் முன் காப்போம்” என்ற கூற்றிற்கமைய தான் இரத்தத்தை ஊற செய்யும் உணவுகளை கொடுக்க வேண்டும் என கூறுவார்கள்.
அந்த வகையில் இரத்தத்தை சாப்பிடவுடனே ஊற செய்யும் உளுந்தங்களி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 பவுல்
நல்லெண்ணெய் - 1/4 பவுல்
தண்ணீர் - 3 பவுல்
உளுந்து - 3/4 பவுல்
கருப்பட்டி - 1 1/2 பவுல்
தயாரிப்பு முறை
முதலில் பச்சரிசி, உளுந்து என்பவற்றை தனியாக ஊற வைத்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பதம் களியை கிண்டும் அளவிற்கு இருக்க வேண்டும்.
இதன் பின்னர் கருப்பட்டியை எடுத்து ஒரு பாத்திரத்தில் தட்டிபோட்டு நீர் கலந்து பாகு போல் கரைக்க வேண்டும்.
கருப்பட்டி கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து விட்டு அரைத்து வைத்துள்ள உளுந்தம் மாவை கொஞ்சம் கொஞ்சமாக பாகுவில் போட்டு கிளறி வேண்டும்.
கிளரும் போது களி கெட்டியான ஒரு பதத்திற்கு வரும், அதில் நல்லெண்ணெயை ஊற்றி குளிர செய்ய வேண்டும்.
எண்ணெய் ஊற்றி கெட்டியாகும் போது சூடுடன் உருண்டையாக பிடித்து பரிமாறலாம்.