சிறுவயதில் பருவமடையும் பெண்களுக்கு ஊட்டம் கொடுக்கும் உளுந்து கஞ்சி
பெண்கள் பருவமடைவது இயல்பான ஒரு விடயம் தான். அதற்கென ஒரு வயது இருக்கிறது. இது இயல்பான ஒரு விடயம் தான். ஆனால் தற்போதைய குழந்தைகள் சில ஏழு, எட்டு வயதில் பருவமடைகிறார்கள்.
மாதவிடாய் என்றாலே என்ன என்று தெரியாத குழந்தைகளும் இன்று பருவமடைதல் அதிகரித்து வருகின்றது. இந்தக் காலக்கட்டத்தில் 7 இலிருந்து 10 வரையிலான வயதுடைய குழந்தைகள் இன்று பருவமடைந்து மாதவிடாயை சந்தித்து வருகிறார்கள்.
அப்படி பருவமடையும் பெண்களுக்கு ஒரு சிறந்த உணவுதான் உளுந்து கஞ்சி.
தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து - 250 கிராம்
கருப்பட்டி - 300
ஏலக்காய் - 1/2
சுக்குபொடி - ஒரு சிட்டிகை
தேங்காய் துருவல் - ஒரு கைபிடி
தேங்காய் பால் - ஒரு கப்
நெய், உப்பு, தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் கருப்பு உளுந்தை 5 மணிநேரத்திற்கு ஊற வைத்து பிறகு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மா பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியை சேர்த்த பாகு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடாகியது அரைத்து எடுத்துக் கொண்ட உளுந்தை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து உளுந்து கட்டியாகாமல் கிளற வேண்டும்.
அதன்பின் உளுந்து 15 இலிருந்து 20 நிமிடம் வரை மிதமான தீயில் வெந்தவுடன் சக்கரை பாகை சேர்த்து கலக்க வேண்டும்.
பின்னர் தேங்காய் பால் சேர்த்த துருவிய தேங்காய் பூவை நெய்யில் வறுத்து ஏலக்காய் மற்றும் சுக்கு பொடி சேர்த்து கிளறி இறக்கினால் உளுந்துக் கஞ்சி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |