நடுவீதியில் நடந்த மணப்பெண் ஊர்வலம்: மணப்பெண் போட்ட கண்டிஷன் இதுவா?
மணமகள் தனது திருமணத்தில் ஊர்வலமாக வர விரும்பி அதை செயல்படுத்தினார். வழக்கமாக திருமண அழைப்பின்போது, மாப்பிள்ளை தான், காரில் ஊர்வலமாக வருவார்.
ஆனால், புதுமையாக, மணப்பெண் காரில் அல்ல, ஜீப்பில் ஊர்வலம் வந்தது வித்தியாசமாக இருந்தது. அதுமட்டுமல்ல, திரைப்படங்களில் காண்பிப்பதைப் போல, பெண் ஜீப்பின் பானட்டில் நின்று, திரைப்படப் பாடல்களுக்கு நடனமாடுகிறார்.
ஸ்டீரியோடைப் பழக்கத்தை மாற்றி, மணப்பெண் காரில் வலம் வந்து, நடனமாடுகிறார்.
அதுமட்டுமல்ல, மணமகள் திறந்த ஜீப்பின் பானட்டில் ஏறி நடனமாடிக் கொண்டே மாப்பிள்ளையை அழைத்துச் செல்வதற்காக புகுந்த வீட்டிற்கு செல்கிறார்.
இந்த மணமகள் ஊர்வலம் பற்றி சமூக ஊடகங்களில் (Social Media) மிகப்பெரிய விவாதங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊர்வலம் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. மணமகள் ஊர்வலம் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
வைரலான வீடியோவில், மணப்பெண் திறந்த ஜீப்பில் ஊர்வலம் செல்வதைக் காணலாம். இந்த ஊர்வலத்தில், டிஜே பின்னணியில் ஒலிக்க, கல்யாணப் பெண் டான்ஸ் ஆடுகிறார்.
வீடியோ மிகவும் அருமையாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப வல்லுநரான பவ்னா லால்வானியின் இந்த மணப்பெண் ஊர்வலத்தை, அந்த வழியே செல்லும் அனைவரும் சில கணங்கள் நின்று, பார்த்து, ரசித்தே செல்கின்றனர்.
மணமகளின் இந்த ஊர்வலத்தின் போது அவரது உறவினர்களும் காரில் இருந்துள்ளனர். தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு மணப்பெண் பாவனா முன்வைத்த கண்டிஷனே மணப்பெண் ஊர்வலம் இருந்தால் தான் கல்யாணம் என்பதுதானாம்.
இறுதியில் மணப்பெண் பாவனாவின் பிடிவாதம் வென்றது. இதைத் தொடர்ந்து, பாவனா திறந்த ஜிப்சியில் சவாரி செய்து திருமணம் செய்துக் கொண்டார்.
लड़की हूं लड़ सकती हूं - जब लड़कों की बारात निकल सकती है तो भोपाल के बैरागढ़ की भावना क्यों पीछे रहें,खुद की बारात में किया शानदार डांस pic.twitter.com/d07pct7lxN
— Satya Vijay Singh (@SatyaVijaySin20) January 31, 2022