அல்சர் பிரச்சினையால் அவதிப்படுகிறீர்களா? இதை செய்தால் போதும்
அல்சர் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்கள் சில வகையான உணவுகளை உட்கொள்வதால் அப்பிரச்சினையிலிருந்து முழுவதுமாக தப்பிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் என்ன சாப்பிடலாம்?
தினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டு வர வயிற்று புண் சரியாகும்.
முட்டைகோஸ், பாகற்காய், முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
காலையில் பிரட் மற்றும் வெண்ணெய் சாப்பிட்டால் வலி குறைய வாய்ப்புண்டு.
தினமும் ஆப்பிள் ஜுஸ், அகத்திக் கீரை சாறு, பீட்ரூட் ஜுஸ் குடித்துவந்தாலும் அல்சர் பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.
நெல்லிக்காய் ஜுஸில் தயிர் சேர்த்து குடித்து வந்தால் அல்சர் பிரச்சினைக்கு நிவாரணம் கிடைக்கும்.
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் இரண்டு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் அல்சரால் ஏற்படும் எரிச்சல் பிரச்சனை சரியாகும்.
பாக்டீரியா எதிர்ப்பு பொருள் நிறைந்துள்ள வெள்ளைப்பூண்டை தேன் கலந்து சாப்பிட்டாலும் அல்சர் சரியாகும்.
வெந்தயம் கலந்த டீ, கற்றாழை ஜுஸ் சிறந்த தீர்வாக இருக்கும்.
மேலும் குறிப்பாக அதிகமான அளவில் நீர் பருகுவதும் சிறந்த தீர்வாக அமையும்.