போர் களத்தில் காதலை சொன்ன ராணுவ வீரர்! உக்ரைனில் நெகிழ்ச்சி சம்பவம்
உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இராணுவ வீரர் ஒருவர் காதலை தெரிவிக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
உக்ரைனில் பதற்ற நிலை
கடந்த மாதம் 24ம் திகதி முதல் உக்ரைன் மீது தாக்குதலை நடத்தி வருகிறது ரஷ்யா, உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மிக கொடூரமாக பொதுமக்கள், மருத்துவமனைகள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளதுடன், ரஷ்யாவுக்கு தடைகளையும் விதித்துள்ளன.
இந்நிலையில் ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் பெண்களும் களமிறங்கி பதிலடி கொடுத்து வருகின்றனர்.
போர் களத்தில் மலர்ந்த காதல்
இந்நிலையில் ராணுவ வீரர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு காதலை வெளிப்படுத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, உக்ரைன் எல்லைப்பகுதியில் வாகன சோதனை நடைபெறுகிறது. வாகனத்தில் வந்தவர்கள் கைகளை பின்னால் கட்டியபடி நிற்க வீரர்கள் அவர்களை சோதனை செய்கின்றனர்.
அப்போது அதில் இருந்த பெண் ஒருவருக்கு இராணுவ வீரர் ஒருவர் மலர் கொத்தை அளித்து தன் காதலை வெளிப்படுத்துகிறார்.
உடனே மகிழ்ச்சியில் அந்த பெண் அந்த வீரரை கட்டியணைத்து கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Kinda hard to beat this proposal: pic.twitter.com/pwNc1sC8Zf
— kendis (@kendisgibson) March 7, 2022