சுதந்திரத்தை விட்டுகொடுப்பதற்கு சமம்! ரஷியாவின் போருக்கு உக்ரைன் ஜனாதிபதி மனைவியின் ஆதங்கம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. தொடர் போரால் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
ஆனாலும் போர் நிறுத்திய பாடு இல்லை. இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி எடுக்கும் முக்கிய தீர்மானத்திற்கு அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்.
தற்போது ரஷ்ய படையெடுப்பை ஜெலென்ஸ்கி முதல் குடிமகனாக எதிர்த்து நிற்க அவரது மனைவி ஒலேனா ஜெலென்ஸ்கா நம்பிக்கை பரப்பும் விதமாக முதல் பெண்மணியாகவும் போர்களத்தில் இறங்கியுள்ளார்.
இதனிடையே ரஷியாவிற்கு நாட்டின் சில பகுதிகளை விட்டுக்கொடுக்கும் சுதந்திரம் மற்றும் அதிபர் விளாடிமிர் புதினின் படையெடுப்பை முடிவுக்கு கொண்டு வராது என்று ஒலேனா ஜெலென்ஸ்கா தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் சில சமயம் நாட்டின் தலைவர்களிடமிருந்து சில சந்தர்ப்பங்களில், செல்வாக்கு மிக்க நாடுகளின் தலைவர்களிடமிருந்தும் கேட்கும் அனைத்து அறிக்கைகளையும் உக்ரேனியர்கள் சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
நாட்டின் சில பகுதிகளை மட்டும் விட்டுக்கொடுக்க முடியாது. இது ஒரு சுதந்திரத்தை விட்டு கொடுப்பது போன்றது. டான்பாஸ் பகுதியில் ரஷியா இப்போது அதன் தாக்குதலை தொடங்கி உள்ளது.
எனவே எங்கள் நாட்டின் பகுதிகளை நாங்கள் விட்டுக்கொடுத்தாலும், ஆக்கிரமிப்பாளர் போரை நிறுத்த மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்து அடிப்பார்கள். எங்கள் நாட்டிற்கி எதிரகாக மேலும் மேலும் தாக்குதல்களை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.