உக்ரைன் - ரஷ்ய போரின் தற்போதய நிலை.... உயிர் பயத்தில் வாழும் உறவுகள்! கண்ணீர் சிந்தும் பெண்
உக்ரைனில் 6வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதோடு மட்டுமல்லாமல், உக்ரைன் கீவ் நகரை நோக்கி 60 கிலோமீட்டர் தூரத்திற்கு ரஷிய போர் வாகனங்கள் அணிவகுத்துச் செல்கின்றன.
நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுறுவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். தீவிரமாகியுள்ள உக்ரைன் ,ரஷ்ய போர் 3 ஆம் உலகப்போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் உலகளாவிய ரீதியில் மக்கள் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனை பிறப்பிடமாக கொண்ட கடந்த 9 வருடங்களாக இலங்கையில் வாழும் லான வோடு உக்ரைன் - ரஷ்ய போரின் தற்போதய நிலைமை கண்ணீருடன் சேிய காணொளி இணையத்தில் வெளியாகியுள்ளது.