கடற்கரைக்கு மணலுக்கு அடியில் காத்துக் கிடக்கும் ஆபத்து? யாரும் அங்கு போகாதீர்கள்!
இங்கிலாந்திலுள்ள சிசெஸ்டர் என்னும் பகுதியில் அமைந்துள்ள மெட்மெரி என்னும் கடற்கரைக்கு செல்ல மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மெட்மெரி கடற்கரையை மக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்க என்ன காரணம் என்பது குறித்து சற்று ஆராய்ந்து பார்க்கலாம்.
பல ஆபத்துக்கள் நிறைந்த மெட்மெரி கடற்கரையில் உள்ள மணலின் அடியில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு பீரங்கிகளுடன் வெடி பொருட்கள் ஆழமாக புதைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமில்லாமல், வெடிகுண்டுகள் போல இன்னும் நிறைய மறைக்கப்பட்ட ஆபத்துக்கள் அந்த கடற்கரையில் நிரம்பி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
மெட்மெரி கடற்கரையே ஒரு ஆபத்து
இது போக, அலை சீற்றம், சீரற்ற நிலம் என பல ஆபத்துக்கள் அந்த கடற்கரையில் இருப்பதால், மக்கள் அங்கே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை ஒன்றும் அந்த கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒருபுறம் அந்த கடற்கரையின் அருகே உள்ள மக்கள், இதன் ஆபத்தை உணர்ந்து அங்கே செல்லாமல் தான் இருக்கின்றனர்.
ஆனாலும், தற்போது ஐரோப்ப நாடுகளில், வெப்ப நிலை வரலாறு காணாத அளவுக்கு வாடி எடுப்பதால், மக்கள் பலரும் மெட்மெரி கடற்கரைக்கு செல்வதை தான் பழக்கமாக கொண்டுள்ளனர்.
எச்சரிக்கும் கடற்படை மீட்புக் குழு
இது பற்றி அறிந்த கடற்படை மீட்புக் குழு, அங்குள்ள ஆபத்து குறித்து மீண்டும் மக்களை அறிவுறுத்தி உள்ளது.
இதேவேளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் வெடிக்கும் தன்மையுள்ள பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மெட்மெரி கடற்கரையில் அவ்வப்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றதாம்.
இது அப்பகுதி மக்களை கடும் அச்சத்திற்கு ஆளாக்கியுள்ளது.
அதே வேளையில், இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதும் தொடர்ந்து ஒரு புதிராகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.