பிறந்த குழந்தைக்கு பகோடா என பெயர் வைத்த பெற்றோர்கள் - அதிர வைத்த காரணம்!
பொதுவாக குழந்தைக்கு வித்தியாசமான பெயர்களை பெற்றோர்கள் வைப்பதை கேள்விபட்டிருப்போம்.
ஆனால் இங்கு ஒரு குழந்தைக்கு சாப்பிடும் உணவு பொருளையே பெயராக வைத்துள்ள தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு தம்பதியர் ஒருவர் பிரபல இந்திய உணவான பகோடா எனும் பெயரை வைத்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, அயர்லாந்தில் உள்ள நியூ டவுன்பேயில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர்கள் அந்த உணவகத்தில் பகோடா உணவை விரும்பியதாகவும், அந்த உணவின் பெயரைத்தான் பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்ததாகவும் அந்த உணவகத்தின் உரிமையாளராக இருந்த பெண்மணி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.

மேலும், பிரசவ காலத்தில் அந்த குழந்தையின் தாய் பகோராவை விரும்பி அதிகம் உண்டுள்ளார். இதனால் தங்கள் குழந்தைக்கு அதையே பெயராய் வைக்க முடிவு செய்துள்ளனர்.
இதற்கு அந்த உணவகம் புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "பகோராவை உலகிற்கு வரவேற்கிறோம்! உன்னைச் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
UK parents name their child after Indian dish 'Pakora'; Internet just can't keep calm
— ANI Digital (@ani_digital) September 3, 2022
Read @ANI Story | https://t.co/tXGvA2A9zf#Pakora #Ireland #Funnymemes pic.twitter.com/AN9mljgClS