ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்திய புகைப்படம்
டால்பின் தலையை போல் காட்சியளிக்கும் பிரித்தானிய துறைமுகத்தின் புகைப்படம் சமூக ஊடகத்தில் மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
பிரித்தானிய துறைமுகத்தின் அரிய காட்சி
பிரித்தானியாவின் Pwllheli துறைமுகத்தின் ட்ரோன் புகைப்படம் ஒன்று டால்பின் தலையை பிரதிபலிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த டால்பின் தலை அமைப்பிற்கு சிறிய புதர் ஒன்று கண் போன்ற அமைப்பையும், துறைமுகத்தில் குவிந்துள்ள சிறிய கற்கள் பாலூட்டிக்கு மூக்கு அமைப்பையும் வழங்கி அருமையான காட்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் துறைமுகத்தில் உள்ள மணல்கள் பிரிந்து டால்பினின் தலை பகுதிக்கு மொத்தமாக உருவம் கொடுத்துள்ளது.
புகைப்பட கலைஞரின் நெகிழ்ச்சி கருத்து
இந்நிலையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட தருணம் குறித்து புகைப்படக் கலைஞர் ரைஸ் ஜோன்ஸ்(Rhy Jones) தெரிவித்துள்ள கருத்தில், நான் இந்த கடற்கரைக்கு பலமுறை வந்துள்ளேன், ஆனால் தற்போது தான் அதை கவனித்தேன், இதை ஒரு முறை பார்த்தால் மீண்டும் பார்க்காமல் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அதிசய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்து, அதில் தன்னுடைய ஆச்சரியத்தை வெளிப்படுத்துவதற்காக பல எமோஜிகளையும் உடன் பகிர்ந்துள்ளார்.
வேல்ஸ் கடற்கரை பல்வேறு கடல் மற்றும் நில உயிரிகளின் இருப்பிடமாக அறியப்படுகிறது. பிரித்தானியாவின் கார்டியன் விரிகுடாவில் அதிகமான டால்பின்கள் வாழ்கின்றன, பிபிசியின் கூற்றுப்படி சுமார் 300 பாட்டில்நோஸ் டால்பின்கள் இப்பகுதியில் வாழ்கின்றன.