70 ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமம் இல்லாமல் தண்ணி காட்டிய முதியவர்; அதிர்ச்சியில் உறைந்த போலீசார்!
70 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் லைசன்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஏதுவும் எடுக்காமல் கார் ஓட்டி வந்த அவரை பிடித்த போலீசாருக்கு அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.
எந்த வாகனம் என்றால், அதற்கான ஆவணங்களையும், வாகனம் ஓட்ட தெரிய உரிய லைசன்ஸையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் சுமார் 70 ஆண்டுகளாக ஓட்டுநர் உரிமம் எடுக்கவில்லை என்றும் இன்சூரன்ஸ் எடுக்காமல் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார்.

இவர், 12 வயதிலிருந்தே ஆவணங்கள் ஏதுவும் இன்றி ஓட்டி வந்துள்ளார். இதனிடையே, சமீபத்தில் அவர் வாகன சோதனையில் சிக்கிய போது இதனை அறிந்து கொண்ட போலீசார் இதுவரை காவலர்களிடம் அவர் 70 ஆண்டுகளாக சிக்காமல் இருந்து உள்ளார் என்ற தகவல் அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், 70 ஆண்டுகளாக அவர் தொடர்ச்சியாக எப்படி அவர் ஓட்டுனர் உரிமம் மற்றும் இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தும் சிக்காமல் இருந்தார் என்று தெரியவில்லையே என போலீசாருக்கே குழம்பி போயுள்ளனர்.