நடுவானில் வட்டமடித்த ஏலியன்களின் பறக்கும் தட்டு? வைரல் வீடியோவால் பரபரப்பு
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மர்ம பொருள் ஒன்று வானில் வட்டமடித்ததால் பரபரப்பானது.
பொதுவாக ஏலியன்ஸ் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் பறக்கும் தட்டில் பயணம் செய்வார்கள் என பரவலாக கூறப்படுவதுண்டு.
வேற்று கிரகவாசிகளை பற்றி அறிந்து கொள்வதற்காகவே பல்வேறு ஆராய்ச்சிகளும் நடந்து வருகின்றன.
இதற்கென தனியாக ஆர்வலர்களும் இருக்கின்றனர். எனினும், இதனை மறுப்பவர்களும் உள்ளனர்.
இந்நிலையில் அவ்வப்போது வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாகவும், மர்மமான பொருள் ஒன்று வானில் வட்டமடிப்பதாகவும் வீடியோக்கள் வெளியாகும்.
அந்த வகையில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 2 மணிநேரத்துக்கு வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு வட்டமடித்ததாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
முக்கோண வடிவில் இருந்த அந்த பறக்கும் தட்டு, சூரிய வெளிச்சத்தின் போது தென்பட்டதாகவும் வீடியோவை எடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.