நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்க! வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், திமுக இளைஞரணி செயலாளராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டுள்ளார்.
மேலும், தற்போது ஆர்டிகல் 15 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்று தான் உதயநிதி கலந்து கொண்டார்.
படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பாக மறைந்த நடிகர் விவேக் அவர்களுக்கு படக்குழு அஞ்சலி செலுத்தியது.
இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
17 வயதாகும் இன்பநிதி தோளில் கைப்போட்டுக் கொண்டு உதயநிதி எடுத்த அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
