டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்யும் பிரபல நிறுவனம்! அலற வைக்கும் சோதனையோட்டம்
அமெரிக்காவில் டிரைவர் இல்லாத டாக்ஸி அறிமுகம் செய்ய இருப்பதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.
புதிய டாக்ஸி அறிமுகம்
பொதுவாக வாகனம் என்றாலே ஓட்டுநர் இல்லாமல் நகராது அவ்வாறு நகருமாயின் அது பாதுகாப்பானதாக இருக்காது.
ஆனால் இந்த கூற்றை முறியடிக்கும் வகையில் அமெரிக்காவில் டாக்ஸியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த டாக்ஸி கண்டுபிடிக்கப்பட்டு லாஸ்வேகாஸ் என்ற பகுதியில் அறிமுகப்படுத்தவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மோஷனல் என்ற தொழில்நுட்ப நிறுவனத்துடன் ஊபர் நிறுவனம் கைகோர்க்கும் இந்த டாக்ஸியை வடிவமைத்துள்ளது.
வைரலாகும் செய்தி
இந்நிலையில் வடிவமைக்கப்பட்ட டாக்ஸி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மக்களின் பாவணைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலர் இது பாதுகாப்பானதா என கேள்விகளை பதிவேற்றி வருகிறார்கள்.
இதற்கு பதிலளித்துள்ள குறித்த நிறுவனம், நூறு சதவீதம் பாதுகாப்பு வழங்கும் என பதிலளித்துள்ளனர்.