UAEல் வேலை பார்க்குறீங்களா? சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றினால் என்ன செய்யலாம்? உடனே தெரிந்து கொள்ளுங்கள்
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் UAEக்கு வேலை தேடி வருபவர்கள் ஏராளம், சிலர் நேரடியாக நிறுவனத்தின் மூலமாகவோ, ஏஜெண்ட்கள் மூலமாகவோ பணியமர்த்தப்படுகின்றனர்.
இதில் விபரம் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலையும் நடக்கிறது, சரிவர சம்பளம் தராமல், அதிக நேரம் வேலை வாங்கி ஏமாற்றுகின்றனர்.
அவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? எப்படி புகார் அளிப்பது உட்பட பல விபரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
எப்போது சம்பளம் வழங்கப்பட வேண்டும்?
எந்தவொரு நிறுவனமும், தாங்கள் வரையறுத்துள்ள தேதியிலிருந்து அதாவது ஊதிய கெடு முடிந்து 10 நாட்களுக்குள் மிகாமல் வழங்கிட வேண்டும்.மேலும் ஊதியத்தை திர்ஹாமில், வேலை நாட்களில் மட்டுமே வழங்கிட வேண்டும்.
மாத சம்பளம் வழங்கப்படவில்லை என்றால் என்ன செய்வது?
தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாமல் அல்லது தாமதமாகும் நிலையில், MoHRE(மனிதவள மேம்பாடு மற்றும் எமிரேஷன் அமைச்சம்)-யை தொடர்பு கொள்ள வேண்டும்.
80060 என்ற இலவச எண்ணையோ அல்லது ask@mohre.gov.ae என்கிற மின்னஞ்சல் மூலமாகவோ தங்களது புகாரை தெரிவிக்கலாம்.
மேலும் குறித்த அமைச்சகத்தின் இணையதளத்தை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்.
இணையதளத்திற்கு சென்றவுடன், புகார் தெரிவிக்கும் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்யவும்.