இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு செல்ல தடைவிதித்த நாடு! அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவிய நிலையில் பல நாடுகள் தடுப்பூசி செலுத்திகொண்டவர்களை மட்டும் அந்நாட்டில் அனுமதித்து வருகின்றனர்.
இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கான விமான சேவையை ஐக்கிய அரபு அமீரகம் தடைசெய்திருந்தது.
இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு ஜூலை 21 வரை தடை விதித்துள்ளது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் லைபீரியா, நமீபியா, சியரா லியோன், காங்கோ ஜனநாயக குடியரசு, உகாண்டா, ஜாம்பியா,
வியட்நாம், இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை, நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா என மொத்தம் 14 நாடுகளுக்கு செல்வதற்கான தடை ஜூலை 21-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அதேப்போல், சரக்கு விமானங்கள், அரசின் ஒப்புதல் பெற்று இயக்கப்படும் விமானங்கள் அந்நாடுகளுக்குச் செல்ல விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.