சிங்கங்களின் பயங்கரமான மோதல்: களேபரத்தை நிறுத்த போராடும் காட்சி
காட்டில் ராஜாவாக திகழும் சிங்கங்கள் சண்டையிட்டு இதுவரை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க முடியாது.
காடுகளில் இருக்கும் விலங்குகளின் வேட்டை என்பது மிகவும் பயங்கரமானதாகவும், திகிலாகவும் இருக்கும். ஆனால் ஒரே இன விலங்குகளின் சண்டையும் அவ்வப்போது அரங்கேறும்.
இங்கு காட்டில் ராஜாவாக உலாவரும் சிங்கங்களுக்கு இடையே பயங்கரமான சண்டை அரங்கேறி வருகின்றது. இந்த சண்டையில் ஆண் சிங்கத்தினை பாதுகாக்க பெண் சிங்கங்கள் போராடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரோல்மான்ஸ்கி என்ற யூடியூப் சேனலில் சிங்கங்கள் தொடர்பான இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை இதுவரை 89 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ஒருவர், "ராஜாவாக இருந்து, ராஜாவாக வாழ்ந்து, ராஜாவாக இறப்பது என்பது அவ்வளவு எளிதல்ல." என்று கமெண்ட் செய்துள்ளார்.