கணவர்களை உதறிவிட்டு 2 பெண்கள் திருமணம்! என்ன காரணம்னு தெரியுமா?
உத்தரபிரதேசத்தில் இரண்டு பெண்கள் தங்கள் கணவர்களை விட்டுவிட்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகின்றது.
குறித்த இரு பெண்களும் கசப்பான திருமணங்களை அனுபவித்ததாகவும், மேலும் தங்கள் துணைவர்கள் மீது ஆழ்ந்த வெறுப்பு ஏற்பட்டதன் விவைாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் தங்களின் உறவில் ஆறுதல் கண்டறிந்து, பொதுவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அவர்கள், தங்கள் பாரம்பரிய உறவுகளை விட்டுவிட்டு ஒன்றாக ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்துள்ளனர்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், பிரிவு 377 குற்றமற்றதாக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒரே பாலின உறவுகள் பாதுகாக்கப்பட்டாலும், இந்த சம்பவத்தில் காதல் குறைவாகவும், ஆண்கள் மீதான பரஸ்பர வெறுப்பு அதிகமாகவும் தெரிகிறது.
அவர்களின் இணைவு, சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தைத் தூண்டியுள்ளதுடன் குறித்த விடயம் இணையத்தில் வைரலாகிவருகின்றது.
I pray to god that all man hating women get married to each other
— Deepika Narayan Bhardwaj (@DeepikaBhardwaj) July 24, 2025
We could save some husbands from being murdered that ways pic.twitter.com/wLFxqcTf4X
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |