ராட்சத ராஜ நாகங்களுக்கு மத்தியில் நபரொருவர் செய்த வேலை! படுவைரலாகும் காணொளி
இரண்டு ராட்சத ராஜ நாகங்களுக்கு மத்தியில் அமர்ந்து அசால்ட்டாக சாப்பிடும் நபரின் பதற வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
பொதுவாகவே ராஜநாகங்கள் மற்ற பாம்புகளுடன் ஒப்பிடும் போது அதிக விஷத்தன்மை கொண்டவையாகவும் விஷ பாம்புகளையே உணவாக உண்ணும் இயல்பு கொண்டவையாகவும் அறியப்படுகின்றது.

சுமார் 13 அடி முதல் 22 அடி நீளம் வரை வளரக்கூடியது. இவை மற்ற நாக பாம்புகளை விட அத புத்தி கூர்மை கொண்டது என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
அடர்ந்த காட்டுப்பகுதிகளில் வாழும் இந்த வகை பாம்புகளை பார்த்து விஷ பாம்புகளே பயப்படும். இதன் நஞ்சு மிகவும் கடுமையானது ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லக்கூடியது.

இவ்வளவு கொடிய விஷம் கொண்ட இரண்டு ராஜ நாகங்களுக்கு மத்தியில் நபரொருவர் அசால்ட்டாக சாப்பிட்டுக்கொண்டருக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |