ப்ளூடிக் பயனாளர்களுக்கு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்திய ட்விட்டர் நிறுவனம்
சமூக வலைத்தள சேவையான ட்விட்டர் தனது ட்விட்டரின் ப்ளூ டிக் பயனாளர்களுக்கு புதிதாக லேப்ஸ் எனும் அம்சத்தினை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்தி பயனாளர்கள் முன்கூட்டியே சோதனை செய்து பார்க்க முடியுமாம். மேலும், யூடியூப் பீரிமியம் சேவையிலும் இதோபோல் யூடியூப் லேப்ஸ் அம்சம் ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்விட்டர் லேப்ஸ் அம்சத்தில் தற்போது பின்டு கன்வெர்சேஷன்ஸ் அம்சமும் வழங்கப்பட்டு உள்ளது. இவை ஐ.ஒ.எஸ். செயலியில் கிடைக்கிறது. இந்த அம்சம் பயனர்கள் குறுந்தகவல்களை பின் செய்து முன்னிலையில் வைத்துக் கொள்ள வழி வகை செய்யும்.
இதுமட்டுமின்றி, டெஸ்க்டாப் தளத்தில் இருந்து நீண்ட நேர வீடியோக்களை பதிவேற்றம் செய்யவும் இந்த அம்சம் உதவுகிறது.
ட்விட்டர் புளூ சேவையை கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஐ.ஒ.எஸ். பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதன் அம்சம்ங்கள் இன்னும் பரவலாக வெளியிடப்படவில்லை.