டுவிட்டர் புதிதாக பயனர்களுக்கு வழங்கும் புளூ சேவை! மாதம் எவ்வளவு கட்டணம் தெரியுமா?
சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் வலைத்தளம் “விசேஷ டுவிட்டர் புளூ சேவை” என்ற சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இந்த சேவையை டுவிட்டர் நிறுவனம் இந்தியா, பிரேசில், இந்தோனேசியா என மொத்தம் 15 நாடுகளில் வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்தியாவிலிருக்கும் டுவிட்டர் பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவில் இனி இணையலாம்.
இந்த சேவை முக்கியமான சில நாடுகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட நிலையில், அதில் முதல் நாடாக இந்தியாவிற்கும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் டவிட்டரில் புளூ டிக் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டுவிட்டர் புளூ சந்தாவை பெறுவதால் இதனையும் பெற்றுக் கொள்ளமுடியும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த டுவிட்டர் புளூ கட்டணம் வலைதளம் மற்றும் மொபைலில் மாதமொன்றுக்கு இந்திய பணத்திற்கு ரூ. 650 மற்றும் ரூ. 900 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டுவிட்டர் நிறுவனம் வழங்கும் சில சலுகைகள்
1. வலைதள வெர்ஷனுக்கு வருடம் அடிப்படையில் சந்தா செலுத்துவோர்கள் இருப்பின் ரூ. 1000 தள்ளுபடி விஷேட சலுகையாக வழங்கப்படவிருக்கிறது.
அதாவது, டுவிட்டர் பயனர்கள் டுவிட்டர் புளூ சந்தாவை வருடாந்திர அடிப்படையில் பெறும் போது வருடத்திற்கு ரூ. 6 ஆயிரத்து 800 மாத்திரம் செலுத்தினால் போதுமானதாக இருக்கும்.
2. வெரிஃபைடு டேக் பெற இருந்த வாடிக்கையாளர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் அதற்கு எந்தவிதமான கட்டணங்களும் செலுத்த வேண்டியதில்லை.
3. தங்களின் டுவிட்களை எடிட் செய்யலாம்.
4. நீண்ட நேர வீடியோக்களை பதிவிடலாம் 5. 50 சதவீதம் வரை குறைந்த விளம்பரங்களை பெறலாம்.
6. டுவிட் செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் அதிகபட்சமாக ஐந்து முறை அவற்றை எடிட் செய்தும் கொள்ளலாம்.
டுவிட்டர் புளூ சேவையை பெறுவது எப்படி?
1. முதலில் டுவிட்டர் பயனர்கள், ப்ரோஃபைல் படத்தின் இடது புறத்தில் க்ளிக் செய்ய வேண்டும்.
2. இந்த சேவையை அதிகபட்சம் டுவிட்டர் கணக்கை துவங்கி 90 நாட்கள் கழித்தது தான் பெறமுடியும்.
3. டுவிட்டர் புளூ சேவைக்கு சந்தா செலுத்தி இருப்பவர்கள், தங்களின் புகைப்படம், ப்ரோஃபைல் பெயர் உள்ளிட்டவைகளை வெரிஃபைடு பேட்ஜ் வழங்கும் வரை மாற்றப்படாமல் இருப்பது அவசியம்.