வெளியான விஜய்யின் சொத்து மதிப்பு... சங்கீதா குறித்து வேட்புமனுவில் கூறியது என்ன?
தவெக தலைவர் விஜய் இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய், தமிழக சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கூட்டணி கட்சிகளுடன் சேராமல் தனித்து 234 தொகுதியிலும் போட்டியிடுகின்றார்.
இதற்கான தொகுதி தலைவர்களை நேற்றைய தினம் அறிவித்து இணையத்தினை ஸ்தம்பிக்க வைத்தார். இதில் விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

அதாவது பெரம்பூர் தொகுதியிலும், திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுவதாக நேற்றைய தினம் அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு சென்ற விஜய்யால் சென்னை நகரமே ஸ்தம்பித்துள்ளது.

சொத்து விபரம் என்ன?
பொதுவாக தேர்தலில் போட்டியிடும் நபர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது சொத்து விபரம் குறித்து பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்ய வேண்டும்.
இந்நிலையில் விஜய் தனது பிரமாணப்பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள சொத்து விபரம் குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தனது பெயரில் அசையும் சொத்து மதிப்பு ரூ.404.58 கோடி என்றும், அசையா சொத்து மதிப்பு ரூ.11.51 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி தன்னிடம் 110 சவரன் நகைகளும், ஐந்து காரும் உள்ளதுடன், கடன் எதுவும் இல்லை என்று தெரிவிததுள்ளார்.
தனது மனைவி சங்கீதா பெயரில் 2020 - 2021 நிதியாண்டில் ரூ. 6,13,520 வருமானம் இருந்ததாகவும், அதன் பின்பு 2021 - 2025 வரை எந்தவொரு வருமானமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மனைவியிடம் சுமார் 391 சவரன் தங்க நகையும், வெள்ளி இரண்டு கிலோவும், வைரம் 134.91 கேரட் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆக மொத்தம் தன் மனைவி சங்கீதாவிற்கு ரூ. 15,51,79,421 மதிப்பிலான சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |