திருச்செந்தூரில் வேலேந்திய கையுடன் தேர்தல் வெற்றிக்கு வழிபாடு செய்த விஜய்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தவெக தலைவர் விஜய் விஸ்ரூப பூஜையில் பங்கேற்றுள்ளார்.

தவெக விஜய்
தவெக விஜய் தற்போது தேர்தலில் களம் பதித்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ம் திகதி பெறபேறுகள் வர காத்திருக்கிறது.
இந்த நிலையில் விஜய் இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பட்டு வேட்டி மேல் துண்டு அணிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் அதிகாலையில் நடந்த விஸ்வரூப தரிசனத்தில் அசவர் பங்கேற்றி உள்ளார்.

விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன?
நாம் அதிகாலையில் கடவுளை காணும் முதல் தரிசனம் தான் விஸ்வரூப தரிசனம்.
கடவுள்களுக்கு நடக்கும் நீராட்டுதலைக் குறிக்கும் சொல் திருமஞ்சனம். இந்த திருமஞ்சனத்திற்கு முன்பாகவே அலங்காரத்தில் கடவுளை தரிப்பது விஷ்ப ரூப தரிசனம் ஆகும்.
முதல் நாள் இரவில் கோயில் நடை அடைக்கப்பட்டு, மறுநாள் காலையில் நடை திறந்ததும், கருவறையில் திரை விலக்கப்பட்டு நடைபெறுகிற முதல் தரிசனத்தை இது குறிக்கும்.

இந்த பூஜையில் கடவுள் பக்தர்களை தன்னை பார்க்க யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என பார்ப்பாராம் என நம்பப்படுகின்றது.
கடவுளின் அருள்பார்வை நேரடியாக பக்தர்களின் மீது விழுவது தான் இந்த விஸ்வரூப தரிசனத்தின் சிறப்பு எனப்படுகின்றது.
திருச்செந்தூர் கோயிலில் நடக்கும் விஸ்வரூப தரிசனம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
இதில் முருகனிடம் பிரச்சினையை சொல்லி முறையிட்டால் முருகன் சாம் கேட்ட வரங்களுக்கு மேலாக நமக்கு பலனையும் வரத்தையும் அள்ளி தருவார் என நம்பப்படுகின்றது.

வாழ்க்கையில் என்ன செய்தாலும் தீர்க்க முடியாத பிரச்சனையில் இருப்பவர்கள் விஸ்வரூப தரிசனம் செய்தால் அந்த பிரச்சினை தீரும் என்பதும், விஸ்வரூப தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்பட்டுள்ள தடைகள் விலகி நல்ல யோகம் ஏற்படும் என்பதும் ஐதீகம்.
இந்த நிலையில் விஜய் தற்போது திருச்செந்தூர் விஸ்பரூப தரிசனத்தில் பங்கேற்றி வழிபாடு செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |