மகன் சஞ்சய்யை கட்டாயப்படுத்த மாட்டேன்... மீண்டும் ட்ரெண்டாகும் விஜய்யின் நேர்காணல்
நடிகரும், முதலமைச்சருமான விஜய் தனது மகன் ஜேசன் சஞ்சய் குறித்து பேசிய பழைய காணொளி ஒன்றினை தற்போது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தர்தலில் நடிகர் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபித்து தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், கடந்த 10ம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார்.
இதற்கிடையே ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவி வந்தது. அதாவது மே 4ம் தேதி தேர்தல் முடிவு வெளியான நிலையில், 234 தொகுதியில் போட்டியிட்ட விஜய் 108 இடங்களை வென்றார்.
இதனால் முதலமைச்சர் பதவிக்கு இன்னும் 10 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், இதனை சில கட்சிகளிடையே பேசி கூட்டணி வைத்து தற்போது 120 என்ற எண்ணிக்கைக்கு கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் திருச்சி தொகுதி ராஜினாமா, நீதிமன்றம் தவெக ஒரு எம்.எல்.ஏ-வை நிறுத்தி வைத்துள்ளது, ஒருவர் சபாநாயகர் என 3 தொகுதிகள் சென்ற நிலையில் தற்போது சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது.
இன்று பெரும்பான்மையை நிரூபிக்கும் நிகழ்வு நடைபெற உள்ள நிலையில், இதில் விஜய்க்கு புதிதாக எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மகனை குறித்து விஜய்
இன்று முதலமைச்சராக இருக்கும் விஜய்யின் தனிப்பட்ட குடும்பத்தில் பல பிரச்சனைகள் நிலவி வருகின்றது. இந்நிலையில் விஜய் தனது மகன் குறித்து பேசிய பழைய காணொளி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா விஜய்க்கு எதிராக செயல்படுவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குறித்து விஜய் எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருந்து வருகின்றார்.

முன்பு பீஸ்ட் பட ப்ரொமோஷனுக்கு நெல்சனுக்கு விஜய் நேர்காணல் கொடுத்திருந்தார். அதில் சஞ்சய் நடிகராக வர தான் ஆசைப்படுவதாகவும், ஆனால் அவரை நான் கட்டாயப்படுத்த மாட்டேன், அவன் என்னவாக வேண்டும் என்பது அவனது விருப்பம்.
பல இயக்குனர்கள் தன்னை தொடர்பு கொண்டு சஞ்சய்யை நடிக்க கேட்டனர். ஆனால் சஞ்சய் தற்போது தொந்தரவு செய்ய வேண்டும் என்றும் சில காலம் அவகாசம் தேவை என்று கூறிவிட்டான்.

பொதுவாக பிள்ளைகள் தங்களது வழியை தேர்ந்தெடுக்க பெற்றோர்கள் முழு சுதந்திரம் கட்டாயம் அளிக்க வேண்டும் என்பது தனது கொள்கை என விஜய் கூறியிருந்தார்.
சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தினை தயாரித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இதுகுறித்து எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS VIDEO
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |