படுத்துக் கொண்டே டிவி பார்ப்பவரா நீங்கள்? ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க
இன்றைய காலத்தில் டிவி பார்ப்பது என்பது வாழ்க்கையில் அன்றாடம் ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. முந்தைய காலத்தில் படுக்கையறையின் வெளியே இருந்த டிவி தற்போது படுக்கையறை வரை சென்றுவிட்டது.
அதிலும் பலர் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பதை விரும்பி வரும் நிலையில், இதனால் பின்பு வரும் பிரச்சினையை யாரும் அவ்வளவாக மனதில் வைத்துக்கொள்வதில்லை.
படுத்துக்கொண்டு டிவி பார்ப்பதால் ஆபத்து என்ன?
நீங்கள் படுத்துக்கொண்டு டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தால் உங்களது உடல் பருமன் அதிகரிக்கும்.
டிவி பார்ப்பதால் நீல நிற ஒளி உடல்நலத்திற்கு பல்வேறு கேடுகளை ஏற்படுத்துகின்றது.
டிவியிலிருந்து வெளியாகும் ப்ளூரே என்ற நீல ஒளி விழித்திரையை சேதப்படுத்துகின்றது என்று எலிகளைக் கொண்டு சோதனை செய்ததில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இரவு நேரத்தில் டிவி மற்றும் லேப்டான், செல்போன் இவற்றினை பயன்படுத்துபவர்கள், குறைந்த வெளிச்சத்தில் இருந்து பயன்படுத்தினால் புற்றுநோய் அபாயம் ஏற்படும்.
அதிக நேரம் இந்த தவறை நீங்கள் செய்துவந்தால் மூளைக்கு போதுமான ஓய்வு கிடைக்காது என்றும் மனச்சோர்வு ஏற்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் கூறப்படுகின்றது.