நடிகையின் 5 வயது மகளுக்கு நடந்த வன்கொடுமை... பிரபல சீரியல் நடிகர் கைது
நடிகை ஒருவரின் 5 வயது மகளை ரிவி சீரியல் நடிகர் ஒருவர் வன்கொடுமை செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியில் பல்வேறு டிவி தொடர்களில் நடித்து வருபவர் நடிகர் பியரல் பூரி. இவர் கடந்த 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஒன்றில் நடிகை ஒருவரின் 5 வயது மகளுக்கு வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நடிகை தனது மகளை படப்பிடிப்பிற்கு அழைத்து வந்த நிலையில், சீரியல் நடிகர் பியரல் பூரி விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். சிறுமி தனது தாயாரிடம் இதுகுறித்து கூறிய போது அவரும் அதை கண்டுகொள்ளவில்லை.
மறுநாள் சிறுமிக்கு உடல்வலி எடுப்பதாக தந்தையிடம் தெரிவிக்கவே, மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளார்.
அதன்பின்பு மருத்துவரின் பரிசோதனையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து, சிறுமியில் தந்தை விசாரித்த போது, முதல்நாள் நடைபெற்ற சம்பவத்தை சிறுமி கூறியுள்ளார்.
பின்பு பொலிசில் பியரல் பூரி மீது புகார் அளித்துள்ளநிலையில், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
பின்பு நீண்ட மாதங்களுக்கு பின்பு தற்போது கைது செய்துள்ளனர். இதுகுறித்து வசாய் பகுதி டிஜிபி கூறுகையில், “பாலியல் பலாத்கார வழக்கு 2019ம் ஆண்டு வர்சோவாவில் பதிவு செய்யப்பட்டு வசாயிக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்” என்றார்.
மேலும், சம்பவம் குறித்து சிறுமியின் தாயாருக்கு தெரிந்திருந்தும், பொலிசாரிடம் தெரிவிக்காமல் இருந்த தாயார் மீதும் நடவடிக்கை எடுக்க பொலிசார் முடிவு செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
