அஞ்சறைப் பெட்டியில் ஏன் மஞ்சள் வைக்கிறார்கள் தெரியுமா? இனி மருந்துகளே தேவையில்லை..
பொதுவாக வீடுகளில் இருக்கும் அஞ்சறைப் பெட்டியில் உள்ள மசாலா பொருட்களில் மஞ்சளும் முக்கியமானது.
இந்தியா போன்ற நாடுகளில் மங்கல நிகழ்ச்சிகளில் மஞ்சளுக்கு தான் முன்னுரிமை வழங்குகிறார்கள்.
புத்த பிட்சுகளின் மேலாடைக்கு நிறமேற்றவும் மஞ்சளே பயன்படுகிறது. சரும பராமரிப்பு முதல் விழாக்கள் வரை இந்த மஞ்சள் மூலப்பொருளாக பயன்படுத்த என்ன காரணம் என பலர் யோசித்து இருப்பார்கள்.
மஞ்சளில் அந்த நிறத்திற்கு அதிலுள்ள “ கர்கியூமின்” என அழைக்கப்படும் நிறமி தான் காரணம். அத்துடன் மஞ்சள் முக்கியமான வேதிப்பொருளாகவும் பார்க்கப்படுகின்றது. மஞ்சள் தொடர்பாக இருக்கும் பல கேள்விகளுக்கு இந்த பதிவில் பதில் கண்டுக் கொள்ளலாம்.
அந்த வகையில் மஞ்சளில் என்னென்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
மஞ்சள் செய்யும் வைத்தியம்
1. மார்புச்சளி மற்றும் கன்றிப்போன ஊமைக் காயங்கள் இருப்பவர்கள் பாலில் மஞ்சள் கலந்து குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்யும் பொழுது விரைவாக குணம் பெற முடியும். பாலூடன் பனங்கற்கண்டு சேர்ப்பது நல்லது.
2. மஞ்சள், வேப்பிலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து காயங்கள் அல்லது அடிப்பட்டிருக்கும் இடங்களில் தடவ வேண்டும். இந்த வைத்தியம் செய்வதால் அம்மை கொப்புளங்கள், சேற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
3. மஞ்சளில் கிருமிகளை நீக்கும் குணம் இருக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு சிரங்குகள், அடிபட்ட புண்கள் இருந்தால் இரவு தூங்குவதற்கு முன்னர் மஞ்சள் கொஞ்சமாக எடுத்து அதில் தடவி விட்டு தூங்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்களில் சிறந்த பயன் கிடைக்கும்.
4. மஞ்சளைச் சுட்டு புகையை நுகர்ந்தால் தலை நீரேற்றம், மூக்கடைப்பு குணமாகும்.
5. முகத்தில் முடி அதிகமாக உள்ள பெண்கள் மஞ்சள் அரைத்து இரவில் முகத்தில் பூசி விட்டு காலையில் கழுவ வேண்டும். இதனை தினசரி செய்து வந்தால் முடி உதிர்ந்து முகம் பொலிவு பெறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |