தினமும் காலையில் 2 பொருளை தண்ணியில கலந்து குடித்தால் இவ்வளவு நன்மை கிடைக்குமாம்!
மழைக்கால வந்துவிட்டாலே பலருக்கு நோய் தொற்று தாக்கிவிடும். சளி, காய்ச்சல் என சிலர் படுத்துவிடுவார்கள். மேலும், மழைக்காலங்களில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி டெங்கு, மலேரியா போன்ற நோய்களும் தாக்கிவிடும்.
எலுமிச்சம்பழமும், மஞ்சள் தண்ணீரும் மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். மழைக்காலங்களில் இதை பருகி வந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே, மழைக்காலங்களில் நோய்களிலிருந்து தப்பிக்க சில வழிமுறைகளைப் பார்ப்போம் -
நோய் எதிர்ப்பு சக்தி
எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி உள்ளது. மேலும் இவை நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்குகிறது. மஞ்சளில் குர்குமின் உள்து. இவற்றை பருகி வந்தால் மழைக்காலங்களில் நோய்கள் நம்மை தாக்காதபடி உடலுக்கு நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தும்.
அழற்சி
காயம் மற்றும் நோய்கள் நம்மை தாக்காமல் பாதுகாக்க, மஞ்சளையும், எலுமிச்சை பழத்தையும் பயன்படுத்துங்கள். இவை அழற்றி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால், நம் உடலில் ஏற்படும் வீக்கத்தையும், நோய் அபாயத்தையும் குறைக்க உதவி செய்யும்.
செரிமானத்திற்கு
எலுமிச்சை பழத்தில் நிறைய சிட்ரிக் அமிலம் உள்ளது. எலுமிச்சை பழச்சாற்றை பருகும்போது அவை செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி விடும். இதனால், சிறந்த ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஊக்குவிக்கும். அதேபோல், மஞ்சளும் நன்கு செரிமானத்திற்கு மருந்தாக பயன்படுக்கிறது. மஞ்சள் வீக்கம் மற்றும் வாயுவை போக்கும் குணம் கொண்டது. மேலும், அஜீரணம், நெஞ்சு எரிச்சல், குடல் சம்பந்தப்பட்ட நோய்களை விரட்டிவிடும்.
தொடர்ந்து எலுமிச்சை, மஞ்சள் கலந்த நீரை குடிக்கலாமா?
வெறும் வயிற்றில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் தண்ணீரை குடிக்கலாம். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
தினமும் எலுமிச்சை மஞ்சள் கலந்த நீரை குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்து அதிகரிக்கும்.
வெறும் வயிற்றில் காலையில் குடித்தால், உடலில் ஊட்டச்சத்துக்கள் நன்றாக வேலை செய்யும். தூங்க செல்வதற்கு முன்பு, எலுமிச்சை மஞ்சள் தண்ணீரை குடிக்கக்கூடாது. அப்படி இரவில் குடித்தால் தூக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும்.
அதிகமாக எலுமிச்சை மற்றும் மஞ்சள் நீரை குடிக்கக்கூடாது. மீறி குடித்தால் இரைப்பை குடல் பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |