ஆரோக்கியத்தை அள்ளிதரும் மஞ்சளில் கலப்படமா? ஈஸியா கண்டுபிடிக்கலாம்! இதோ காணொளி
தமிழர்களின் வாழ்விலும், உணவிலும் மற்றும் மருத்துவத்திலும் மஞ்சள் (Turmeric) நீங்கா இடம் பெற்றுள்ளது.
குறிப்பாக பெண்களின் வாழ்வில் பெரும் முக்கியத்துவத்தை வகிக்கிறது. ஆம் அவர்களின் அழகினை மேலும் அதிகமாக்க மஞ்சளை தேய்த்து குளிக்கின்றனர்.
மஞ்சள் (Turmeric) மிகச்சிறந்த கிருமி நாசினியாகும் (Antiseptic). உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள், மற்றும் புண்களில் மஞ்சள் சிறந்த மருந்தாக உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேதா (Ayurveda), பாரம்பரிய சீன மருத்துவம் (Traditional chinese Medicine) என பல மருத்துவ முறைகளில் மஞ்சள் உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சளில் புரதம் (Proteins), நார்ச்சத்து (Fiber), வைட்டமின் E (Vitamin E), நியாசின், வைட்டமின் C, பொட்டாசியம், தாமிரம் (காப்பர்), இரும்பு (Iron), கால்சியம் (Calcium), மக்னீசியம், துத்தநாகம் (Zinc) போன்ற ஊட்டச்சத்துகளும் தாதுக்களும் நிறைந்துள்ளன.
அதுமட்டுமின்றி, அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளதால், பல்வேறு வகைகளில் உடலுக்கு நன்மையளிக்கிறது.
இவ்வாறு பல நன்மைகளை அளித்து வரும் மஞ்சளில் கூட தற்போது கலப்படம் அதிகரித்துள்ளது. அதனை எவ்வாறு கண்டறியலாம் என்பதை தற்போது காணலாம்.
உண்மையான மஞ்சள் தூள் நீரில் போட்டதும் இளமஞ்சள் நிறத்தில் காணப்படுவதுடன், கீழே சென்ற படிந்து கொள்கின்றது.
அதுவே கலப்படம் என்றால் தண்ணீரில் நிறம் அடர் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதை வைத்து நீங்கள் கண்டறியலாம்.
Detecting Artificial Colour Adulteration in Turmeric#DetectingFoodAdulterants_3@MIB_India@PIB_India @mygovindia @MoHFW_INDIA pic.twitter.com/eTJL1wJ9yT
— FSSAI (@fssaiindia) September 1, 2021