துளசி செடியை பெருமாளுக்கு மட்டும் தான் சாத்தலாமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்
பொதுவாக வீடுகளில் துளசி செடி வளர்ப்பது வீட்டிற்கு நல்லது என பெரியவர்கள் கூறுவார்கள்.
ஆனால் இதனை சிலர் மாத்திரமே வீட்டில் வளர்க்கிறார்கள். அத்துடன் நகரங்களில் வாழும் மக்களுக்கு துளசி செடி பற்றி அறுமை தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
மாறாக இந்த மாதம் பெருமாளுக்கு ஏற்ற மாதம் என்பதால் மக்கள் அதிகமாக துளசி செடியை தேடுவார்கள்.
ஏனெனின் பெருமாளுக்கு பூஜை செய்யும் போது அவருக்கு அணிவிக்கும் மாலை துளசியால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வளவு சிறப்புக்கள் கொண்ட துளசிச் செடியில் வேறு என்னென்ன நன்மைகள் இருக்கின்றன. என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
துளசி தீர்த்தம் எதற்காக கொடுக்கப்படுகின்றது?
பெருமாளுக்கு பிரியமானதாக சைவ தலங்களில் கண்டிப்பாக துளசி செடிக்கு வேலை உண்டும்.
மேலும் துளசி இலை நீரானது, கங்கை நீருக்கு சமமாக கருதப்படுகிறது, இதனால் பெருமாளுக்கு அபிஷேகம் செய்யும் போது துளசியால் ஆன நீரை பயன்படுத்துவது சிறந்தது.
இவ்வாறு கொடுக்கப்படுகின்ற துளசி தீர்த்தத்தை தினமும் பருகினால் தலைச்சுற்றல், மூச்சுத்திணறல் முதலானவை சரியாகும் என்கிறார்கள்.
அதுமட்டுமன்றி துளசியை கொண்டு மனித உடலைக்கூட சுத்தம் செய்யலாம் என கூறப்படுகின்றது.
துளசி தீர்த்தத்தை புதன் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றது அதற்கு ஏதாவது வழிகாட்டு என இறைவனிடம் சென்று முறைப்பாடு செய்வதற்கு பதிலாக இது போன்ற நம்பிக்கைகளை கடைபிடித்தாலே போதுமானதாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |