லட்சுமி தேவியை மகிழ்விக்க வேண்டுமா? துளசிச் செடிக்கு இத பண்ணுங்க
செல்வத்தை அள்ளித்தரும் லட்சுமி தேவியின் பிரியமான துளசிச்செடிக்கு எவற்றை செய்வதால் வீட்டிற்கு செல்வம் வரும் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
துளசிச் செடி
வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் வாஸ்த்துபடி வைப்பதால் பராமரிப்பதால் தான் அந்த பொருளால் எமக்கு பயன் கிடைக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் துளசிச் செடியை இவ்வாறு பராமரித்தால் லட்சுமி தேவியின் கிடைக்கும். துளசி செடி காய்ந்தால் அது அசுபமாக கருதப்படுகிறது.
இவ்வாறு உலர்ந்த செடியை வீட்டிற்குள் வைக்கும் போது எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையும் என்று நம்பப்படுகிறது. வாடிப்போன துளசி செடிக்கு பதிலாக மற்றொரு பச்சை செடியை நட வேண்டும்.
உலர்ந்த செடிகள் மற்றும் கிளைகள், ஏதேனும் இருந்தால், தீ வைத்து எரிக்கப்படும். ஆனால் காய்ந்த துளசி செடியில் அப்படி ஒரு தவறை செய்யக்கூடாது. இதை பூமியில் புதைப்பது நல்லது. துளசி செடியின் இலைகளை தேவைப்படும் போது மட்டுமே எடுக்க வேண்டும்.
இரவில் தவறுதலாக கூட துளசி இலைகளை பறிக்காதீர்கள். மேலும் ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதியில் துளசி இலைகளை வெட்டுவது நல்லதல்ல. செடியை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்படி செய்தால் லட்சுமி தேவியை மகிழ்வித்து அவரின் ஆசிர்வாதத்தை பெற முடியும் என்பது நம்பிக்கை.