செவ்வாய்க்கிழமையில் பிறந்தவரா நீங்கள்... உங்கள் பிறப்பின் சிறப்பு என்னதெரியுமா?
பொதுவாக வாழ்க்கையில் வாஸ்து சாஸ்திரம் இன்றியமையாத ஒன்றாகவே இருக்கிறது. இது பிறப்பில் இருந்து இறப்பு வரைக்கும் நம் வாழ்வில் பல்வேறு வகையில் கலந்து இருக்கிறது.
அதில் நாம் பிறந்த நாள், கிழமை, திகதி, ராசி, லக்னம், நட்சத்திரம், எண் என்பன எவ்வாறு நம் வாழ்க்கையில் வேலை செய்யப் போகிறது என்பதனை தெரிந்துக் கொள்ள ஆர்வம் அதிகமாக இருக்கும்.
நம் வாழ்வில் நாம் சில கஷ்டம், சோதனைகள், சாதனைகள், இன்பம், வளர்ச்சி என்பவற்றைக் கடந்து தான் வரவேண்டும் இதில் செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்களும் இவற்றை சந்தித்து ஆகவேண்டியுள்ளது. அந்தவகையில், செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் எப்படியான குணங்களைக் கொண்டிருப்பார்கள் அவர்கள் எதிர்மறை குணங்கள் என்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர்களின் குணங்கள்
- செவ்வாய்க்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமானவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள்
- எந்த விடயங்களையும் சொந்தமாக செய்ய விரும்புவார்கள்
- எப்போதும் இலங்குகளை அடையவதில் உறுதியாக இருப்பார்கள்
- யாரிடமும் உதவியோ அல்லது ஆலோசனையையோ கேட்க மாட்டார்கள்
- சில சமயங்களில் பிடிவாதமாகவும் எல்லா விடயங்களிலும் இருந்து ஒதுங்கி இருப்பார்கள்.
- இவர்கள் தைரியமானவர்களாக இருப்பார்கள். சவால்களை கண்டு அஞ்சாமல் நேருக்கு நேர் சந்திப்பார்கள்
- எப்போதும் பம்பரம் போல சுறு சுறுப்பாக சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
- அன்பை சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்.
- அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள்.
- காதலில் மிகவும் உறுதியாகவும் பிடிவாதமாகவும் இருப்பார்கள்.
- இவர்களுக்கு காயம், விபத்து போன்றவை தொடர்ந்துக் கொண்டே இருக்கும்.
- தொழில் செய்யும் இடத்தில் பொறுப்பு நிறைந்தவர்களாக இருப்பார்கள்
- மனதை விட உடல்ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பார்கள்
- ஆக்கப்பூர்வமாகவும், கற்பனைத்திறன் உடையவராகவும் இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |