நரைமுடி பிரச்சனையிலிருந்து தப்பிக்க வேண்டுமா? இந்த பொருளை ட்ரை பண்ணுங்க
இன்று பெரும்பாலான நபர்கள் நரை முடி பிரச்சினையால் அவதிப்படும் நிலையில், அதற்கான நாட்டு மருந்து எவ்வாறு தயார் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நரைமுடி பிரச்சினை
இன்று பெரும்பாலான நபர்கள் சந்திக்கு பிரச்சினையாக நரைமுடி பிரச்சினை உள்ளது. அதிலும் இளம் வயதினரும் இந்த பிரச்சினையை சந்திக்கின்றனர்.
வயதானவர்களுக்கே நரைமுடி என்றால் சற்று கலக்கம் ஏற்படும். அவ்வாறு இருக்கையில் இளம்வயதினர் நரைமுடி பிரச்சினை ஏற்பட்டால் மனநிலை மிகவும் சோகமாக மாறிவிடும்.
இளநரை மறைவதற்கு நாம் மூசாம்பரம் என்னும் பொருளை மட்டும் நாட்டு மருந்து கடையில் வாங்க வேண்டும்.
இது கற்றாழை ஜெல்லில் இருந்து வெளிவரும் மஞ்சள் நிற திரவத்தை நாம் பயன்படுத்தாமல் தூர போட்டு விடுவோம்.
அந்த திரவத்தை சேகரித்து வைத்து அதில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் இந்த முசாரம். இதை வைத்து தான் இளநரையை தடுப்பதற்கான பேக்கை தயார் செய்யப் போகிறோம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய்
மூசாம்பரம்
செய்முறை:
முதலில் கால் கப் நல்ல முற்றிய தேங்காய் துண்டுகளை எடுத்து, அதனை மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அதிலிருந்து தேங்காய் பால் எடுத்து ஒரு பவுல் ஒன்றில் போட்டுவிட்டு, அதில் மூசாம்பரம் ஒரு கட்டியையும் போட்டுவிட வேண்டும்.
குறைந்தது 4 மணி நேரம் ஊற வைத்தால், கெட்டியான பேஸ்ட் பதத்திற்கு வரும் நிலையில், இதனை தலையில் பேக்காக அப்ளை செய்து விடவும்.
சுமார் 1 மணி நேரம் தலையில் ஊற வைத்து பின்பு மைல்டான ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கவும், இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்ததால் நரைமுடி பிரச்சினை ஒரு மாதத்திற்குள் சரியாகிவிடும்.
இவற்றினை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வெள்ளை முடி தடுக்கப்படுவதுடன், வெள்ளை முடியும் நிறம் மாற வாய்ப்பு உள்ளதாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |