தினமும் இரவில் குளித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
காலையில் குளிப்பதை விட இரவில் தூங்கும் முன்பு குளித்தால் ஏற்படும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடலின் பாகங்களை தூய்மையாக வைத்திருக்க தினமும் குளிப்பது மிகவும் அவசியமாகும். உடல் சூட்டையும் சரி செய்ய உதவுகின்றது.
தினமும் தலைக்கு குளிப்பதால் சிலருக்கு தலைவலி மற்றும் சைனஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நாம் காலையில் குளிப்பதை விட இரவு நேரத்தில் குளித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.
இரவில் குளித்தால் நடக்கும் மாற்றம்
தினமும் இரவில் குளிப்பதால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், சரும பாதிப்புகளை நீங்கி சருமம் பொலிவடையும்.
உடல் சோர்வு மற்றும் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கச் செல்லும் முன்பு குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவில் குளிப்பதால் ரத்த ஓட்டம் சீராவதுடன், புத்துணர்ச்சியடையவும் செய்கின்றது.
தூங்கும் முன் தலையை சுத்தம் செய்யாமல் தூங்கினால் தலையில் உள்ள சில பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் தலையணையில் பரவி அங்கேயே தங்கிவிடும் என்பதால், தூங்கும் முன்பு தலையை சுத்தம் செய்துவிட்டு அல்லது குளிப்பது நல்லது.
நமது உடலும் தசையும் சோர்வாக இருக்கும் இரவு நேரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பது நல்ல பலனை தரும்.
ஆனால் கோடை காலங்களில் சுடு தண்ணீரில் குளிக்காமல், குளிர்ந்த தண்ணீரில் குளிக்கவும்.
பொதுவாக உறங்க செல்வதற்கு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு முன் குளிப்பது நமது உடல் வெப்பநிலையை சீராக வைத்திருக்க உதவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |