வயிறு தட்டையா ஸ்லிம்மா இருக்கணும்னா இந்த பானத்தை தயாரித்து குடிங்க... அடுத்த நாள அதிசயம் நடக்கும்!
நாம் உடல் எடை அதிகமாக இருக்கிறது என்று அதிகமாக உடற்பயிற்சி செய்து உடலை குறைத்தால் அங்கு வந்து நிற்கிறது இன்னொரு பிரச்சனை! அதுதான் இந்த சதை போடுதல்.
கழுத்து, கை, தொடை போன்ற பகுதிகளில் இந்த தேவையற்ற சதை நம்மளுடைய உடல் அழகை பாதிக்கிறது.
பெண்களுக்கு சேலை பேண்ட் போன்றவை அணியும்போது நன்றாக இருப்பதில்லை என்றும் வருந்துகின்றனர்.
இதனை சரி செய்வதற்கான மருந்து உங்கள் வீட்டுக்குள் இருக்கிறது. இந்த கட்டுரையில் அதனை பற்றி விரிவாக பார்க்கலாம். அதாவது, இஞ்சி மற்றும் ஜீரகம் தண்ணீரினை கொண்டே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்.
பானம் செய்வது எப்படி?
ஒரு ஸ்பூன் சீரக விதைகளையும் இஞ்சியையும் எடுத்துக் கொள்ளுங்கள். சீரகத்தினை பவுடராக இருந்தாலும் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ளலாம் அதை இரண்டினையும் 500 மில்லி லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும்.
பின் அவற்றை நன்றாக கொதிக்கவைத்து அதாவது 500 மில்லி லிட்டர் தண்ணீரானது பாதியாக 250 மில்லி லிட்டர் தண்ணீர் வரும் அளவிற்கு நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அவற்றினை ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தேவை என்றால் பட்டை, ஏலக்காய் அல்லது கொஞ்சமாக லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்துக் கொள்ளலாம்.
அதன் சுவையை அதிகரிப்பதற்கு உதவும். இவற்றினை காலையில் தொடர்ந்து 10 நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் உங்களுடைய உடலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
மேலும், சரியான டயட் முறை மற்றும் தினமும் 45 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி மேற்கொண்டால் இந்த பானம் நல்ல பலனை அளிக்கும்.
உங்களுடைய சக்திகளை அதிகரித்து உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இன்னும் கரையாத கலோரிகளை குறைப்பதில் இவை முக்கிய பங்கு வகிப்பதன் காரணமாக நாம் இதனை குடிக்கலாம்
ஒரே நாளில் நல்ல ஒரு மாற்றத்தினை உங்களினால் உணர முடியும்.