பெண்களின் முகத்திற்கு அழகு சேர்க்கும் புருவங்களை அடர்த்தியாக வளர்ப்பது எப்படி?
பொதுவாக சில பெண்கள் தங்களின் புருவங்களை அடர்த்தியாக வளர்க்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள்.
அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி பெண்கள் அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர்.
இந்த தீர்வு எல்லா நேரங்களிலும் சரியாக வராது. மாறாக நாம் அழகுசாதனங்களை பொருட்களை பயன்படுத்தாது.
வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு புருவங்களை நமக்கு ஏற்ற வகையில் வளர்த்து கொள்ளலாம்.
Image - wikihow
இது தொடர்பான குறிப்புக்களை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
புருவங்களை அடர்த்தியாக்குவது எப்படி?
1. தேங்காய் எண்ணெய்யை தினமும் புருவங்களின் மேல் தடவி வந்தால் இரத்தயோட்டம் அதிகமாகி புருவங்கள் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கின்றது.
2. விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்தால் புருவங்கள் கொஞ்சம் கொஞ்சமா அடர்த்தியாக வளரும். அத்துடன் உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் கொடுக்கும்.
Image - instyle
3. இரவில் படுக்கைக்கு செல்லும் முன்னர் பாதாம் எண்ணெயை புருங்களில் தடவ வேண்டும். இதனால் தொடர்ந்து புருவங்கள் நீக்காமல் வளரும்.
4. கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் முன் புருவங்களில் தடவி, காலையில் குளிர்ந்த நீரினால் கழுவினால் புருவங்கள் அடர்த்தியாக வளரும்.
5.முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் புருவங்களின் வளர்ச்சியை இரண்டு வாரங்களில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். |