இரவு நேரங்களில் கற்றாழை தடவினால் என்ன நடக்கும்? தாறுமாறான ப்யூட்டி டிப்ஸ் இதோ!
பொதுவாக சரும பிரச்சினைகளை குணப்படுத்தும் மருத்துவ குணமிக்க தாவரங்களில் கற்றாழையும் ஒன்று.
இதில் 96 சதவீதம் தண்ணீர் உள்ளதால் முகத்தை எப்போதும் ஈரழிப்பாக வைத்து கொள்ளும்.
வைட்டமின் ஏ, பி, சி மற்றும் ஈ உடன், பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கற்றாழையில் காணப்படுகின்றன.
அந்த வகையில் கற்றாழை ஜெல்லை இரவு நேரங்களில் தான் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என கூறுவார்கள்.
இதற்கான முக்கிய காரணத்தை தொடர்ந்து பார்க்கலாம்.
கற்றாழை முகத்தில் தடவுவது எப்படி?
சந்தைகளில் விற்கப்படும் கற்றாழைகளை வாங்கி வந்து அதில் நடுவில் இருக்கும் ஜெல்லை மாத்திரம் தனியாக பிரித்தெடுத்து அதனை இரவு நேரங்களில் முகத்தில் அப்ளை செய்ய வேண்டும்.
கற்றாழை மற்றும் மஞ்சள்
IMAGE - bebeautiful
முகத்தை பளபளவென வைத்து கொள்ள நினைப்பவர்கள் கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் கலந்து முகத்தில் தடவலாம்.
முகப்பரு முதல் தோல் பதனிடுதல் வரையிலான பிரச்சனைகளுக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.
எனவே உங்கள் உள்ளங்கையில் கற்றாழையை எடுத்து, அதில் ஒரு சிட்டிகை மஞ்சளை கலக்கவும்.
பின்னர் முகத்தில் தேய்த்து சரியாக 10-15 நிமிடங்கள் வரை காய விட்டு கழுவ வேண்டும்.