பிரதீப் ஒரு அப்பாவி... விசித்ரா மேடம் வந்து... டைட்டில் வின்னர் அர்ச்சனாவின் பேட்டி
பிக்பாஸின் சீசன் 7 வது நிகழ்ச்சி அண்மையில் நடந்து முடிந்தது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த எல்லோரும் ஒவ்வொரு நபராக பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் பிக்பாஸ் வீட்டின் டைட்டில் வின்னனரான அர்ச்சனா தற்போது பேட்டி கொடுத்து உள்ளார்.
வைல்டு கார்டு என்ட்ரி வழியாக நிகழ்ச்சிக்குள் வந்த அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்ந்து எடுக்கப்பட்டார், ரன்னராக மணி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக வைல்டு கார்டு என்ட்ரி வழியாக உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளர் அர்ச்சனா.
அர்ச்சனா
அவர் பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோது நிக்சன் - வினுஷா பிரச்சினை விசித்ரா நட்பு முறிவு, பிரதீப் ரெட் கார்டு விவகாரம் போன்றவற்றை தெளிவாக கூறியிருந்தார்.
அவர் கூறியதாவது “பிக் பாஸ் வீட்டில் ஒரு பலமான போட்டியாளர் என்றால் அது பிரதீப் தான் என நான் கூறுவேன். அவர் சூப்பராக விளையாடக்கூடிய போட்டியாளர் .
அவரின் கேரக்டர் மிகவும் அப்பாவித்தனமாக இருக்கும், இவரை பெண்கள் பாதுகாப்பை வைத்து வெளியே அனுப்பி இருக்க கூடாது.
வேறு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வெளியே அனுப்பி இருக்கலாம். அவர் அந்த விஷயத்திற்கு வெளியே செல்ல தகுதியானவர் இல்லை. விசித்ரா என்னுடன் இருந்ததற்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்.
அவர் மீது எனக்கு இருந்த அபிப்பிராயம் போனதற்கான காரணம் என்னைப் பற்றி யாரோ தவறாக சொல்லும் போது அதை அவர் என்னிடம் நேரடியாக வந்து கேட்காதது தான்.
அவர் இன்னும் என்னுடன் பேசவில்லை.
நிக்சன் வினிஷாவை பற்றி தவறாக பேசிய பிறகு, அவன் பயந்தான் அந்த நிலையில் நான் அவனுக்கு நீ உன்னுடைய கேமில் கவனம் செலுத்து இப்படி இருந்தால் மக்கள் நீ தெரியாமல் தவறு செய்ததாக நினைத்து விட்டு விடுவார்கள்.
ஆனால் நிக்ஷன் எனக்கு எதிராகவே நின்றான். ஒரு கட்டத்தில் நான் முதல் வாரத்தில் அழுத விஷயங்களை எல்லாம் கிளற தொடங்கினான.
உடனே நான் அவனிடம் ஏன் முதல் வாரத்தில் நடந்ததையெல்லாம் இப்போது பேசுகிறாய் என்று கேட்டேன்.
அதற்கு அடுத்த நாள் விஷ்ணுவும் வினுஷாவிற்கு பேசியது தவறு என கூறும்போது ஆம் வினுஷாவை பற்றி பேசியது தவறு என நானும் கூறினேன். இப்படித்தான் எனக்கும் நிக்ஷனுக்கும் சண்டை வந்தது.
இவ்வாறு அர்ச்சனா கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார். மற்றும் தனக்கு ஆதரவாக 19 கோடி வாக்குகளை எனக்கு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பேசியுள்ளார்.