விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் த்ரிஷா அழுதது ஏன்? விழாவில் நடந்த சம்பவம்
விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் நடிகை த்ரிஷா எமோசனலாகி கண்ணீர் விட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் பதவியேற்பு
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய், மே 10 அன்று தமிழக முதலமைச்சராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றார்.
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் அரங்கத்தில் நடைபெற்ற இந்த பிரம்மாண்டமான பதவியேற்பு விழாவில் அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

விஜய்யின் பெற்றோர்களான எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர், ஆனால் அவரது மனைவியும் குழந்தைகளும் வரவில்லை.
நடிகை திரிஷா கிருஷ்ணனும் இவ்விழாவில் கலந்துகொண்டார், அவரது வருகை ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது.

உணர்ச்சிவசப்பட்ட த்ரிஷா
நிகழ்ச்சிக்கு வந்த த்ரிஷா விருந்தினர்கள் மற்றும் பிரபலங்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுடினார். மேலும் பலர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் விஜய் அம்மா அப்பாவிற்கு கொடுக்கப்பட்ட அதே மரியாதை த்ரிஷாவிற்கும் கொடுக்கப்பட்டிருந்தது.
த்ரிஷா விஜய் அம்மா ஷோபாவை கட்டிப்பிடித்து மகிழ்ச்சியுடன் பேசி இருந்தார்.

இந்த நிலையில் விஜய் மக்களிடையே உரையாற்றியபோது, த்ரிஷா உணர்ச்சிவசப்பட்ட்டு அழுதார். அவருடைய கண்ணீரை அவர் அடக்க முற்பட்ட காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளிக்கு இணையவாசிகள் இது உண்மையான நட்பு இதை கொச்சப்படுத்தாதீர்கள் என கூறி இருந்தனர். சிலர் விஜய் மனைவி தானே இப்படி உணர்ச்சிவசப்பட வேண்டும் த்ரிஷா ஏன் அழுகிறார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
த்ரிஷா அழுவதை பார்க்கும் போது விஜய் இந்த அரசியலில் எவ்வளவோ காயப்பட்டிருக்கலாம் அதை தாண்டி அவருடைய இந்த வெற்றிக்கு மக்களுடன் சேர்த்து த்ரிஷாவின் நட்பும் ஒரு காரணமாக இருக்கலாம் என கருத்து வெளியாகி வருகின்றது.
Aathi idhu epo....😭 Trisha getting emotional by Vijay's speech today pic.twitter.com/T16K8ycBm6
— `` (@peekaboo_pr) May 10, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |