இவரைப் போல ஒருவரை தான் தேடுகிறேன்... திருமணம் குறித்து மனம் திறந்து பேசிய த்ரிஷா
நடிகை த்ரிஷாவிற்கு இந்த பிரபல நடிகரைப் போல ஒருவர் தான் கணவனாக வேண்டும் என நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை த்ரிஷா. இவர் அப்போதும் இப்போதும் எப்போதும் ரசிகர்களின் விருப்பப் பட்டியலில் இருந்துக் கொண்டிருப்பவர்.
இவர் லேசா லேசா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். அன்றிலிருந்து பல முன்னணி ஹீரோக்களுக்கு கதாநாயகியாக இன்று வரை அந்த கதாநாயகி இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
த்ரிஷா தற்போது விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவரைப் போல நல்ல கணவன்
நடிகை த்ரிஷாவிற்கு தற்போது 40 வயதாகின்ற நிலையில் அவர் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார். இந்நிலையில் திருமணம் குறித்து அவர் நேர்காணல் ஒன்றில் தெரிவிக்கையில்,
என் நினைப்பு எல்லாம் சினிமா என் கையில் தான் இருக்க வேண்டும் தான் நினைக்கிறேன். எனக்கு சினிமாவைத் தவிர வேறெதுவும் தெரியாது. என் திருமணம் குறித்து அடிக்கடி கேள்வி வந்துக் கொண்டிருக்கிறது.
நான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்றால் முதலில் நம் மனதிற்கு பிடித்த ஒருவரை சந்திக்க வேண்டும். விவாகரத்து குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. திருமணம் செய்து விவாகரத்து செய்துக் கொள்ளவும் விருப்பம் இல்லை, எனக்கு தெரிந்து நண்பர்கள் பலர் திருமண வாழ்க்கையில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.
என் வாழ்க்கையும் கஷ்டப்படும் படி ஆகி விடக்கூடாது அதில் நான் கவனமாக இருக்கிறேன். எனக்கான நபரைத் தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும் அவர் ஒரு ஜென்டில் மேன். நானும் அவரும் நிறைய பேசியிருக்கோம். அவர் செய்யும் பலதரப்பட்ட விடயங்கள் எனக்கு பிடிக்கும் அவர் நல்ல கணவராகவும், நல்ல அப்பாவாகவும் இருக்கிறார் அவரைப் போல ஒருவரை தான் எந்த பெண்ணும் கணவனாக பெற விரும்புவாள் என நாசுக்காக அஜித் போல ஒரு கணவன் தான் வேண்டும் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |