த்ரிஷா விஜய் பற்றிய சுசித்திராவின் சர்ச்சைப் பேச்சுக்கு த்ரிஷா கொடுத்த பதிலடி!
நடிகை த்ரிஷா விஜய் பற்றி பாடகி சுசித்ரா அண்மையில் கூறிய சர்ச்சை விவகாரத்திற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார்.
த்ரிஷாவின் பதிலடி
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை பாடகி சுசித்ரா தெரிவித்து இருந்த நிலையில், பாடகி சுசித்ராவுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார் நடிகை த்ரிஷா.
பாடகி சுசித்ரா தனது கணீர் குரல் மூலம் தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு படங்களிலும் தனித்துவமான பாடல்கள் மூலம் முத்திரை பதித்துள்ளார்.
அத்துடன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான தமன்னா, மாளவிகா, ஸ்ரேயா, லட்சுமி ராய் உள்ளிட்ட நடிகைகளுக்கும் டப்பிங் பேசி, அவர்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளார்.
பின்னர் நடிகர் கார்த்திக் குமாரனை திருமணம் செய்து கொண்டு கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். பின்னர் 2021 ஆம் ஆண்டு அம்ருதா ஸ்ரீனிவாசன் என்ற நடிகையை இரண்டாவதாக கார்த்திக் குமார் திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில் யூடியூப் சேனலுக்கு பாடகி சுசித்ரா அளித்த பேட்டியில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பேச, மீண்டும் சர்ச்சை உருவானது.
நடிகர் விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக நடிகை த்ரிஷா விஜயுடன் எடுத்தப் புகைப்படம் ஒன்றைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்து சொல்லி இருந்தார்.
இது சமூகவலைதளங்களில் பல சந்தேகங்களுக்கும், சர்ச்சை பேச்சுக்களுக்கும் வழிவகுத்தது. இதை கவனித்த நடிகர் விஜய் சமூகவலைதளங்களில் வரும் எல்லாவற்றையும் நம்ப வேண்டாம் என சமீபத்தில் நடந்து முடிந்த கல்வி விருது விழாவில் மறைமுகமாக பதிலடி கொடுத்தார்.
இதன்போது பாடகி சுசித்ரா விஜய் தனக்கு சொந்தமானவர் என்பதை காட்டுவதற்காக த்ரிஷா இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருப்பதாக பாடகி சுசித்ரா குற்றம் சாட்டி இருந்தார்.
The calm to a storm,The storm to a calm!
— Trish (@trishtrashers) June 23, 2024
To many more milestones ahead??
♥️♾️? pic.twitter.com/k4ZK75v7PZ
மேலும் நடிகர் விஜய்யை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் நல்லவர் என்றும், அவர் நடிகை த்ரிஷாவை விட்டு பிரிய வேண்டும் என்ற ரீதியிலும் பேசி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பினார் பாடகி சுசித்ரா.
சுசித்ராவின் இந்த பேச்சுக்குத்தான் தற்போது த்ரிஷா பதிலடி கொடுத்துள்ளார். ’நீங்கள் ஏதேனும் ஒன்றை தவிர்க்க நினைத்தால், உங்களைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதீர்கள்’ என சூசகமாக சுசித்ராவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை த்ரிஷா.
சுசித்ராவின் பெயரை பயன்படுத்தாமல் தனது கருத்தை நடிகை த்ரிஷா எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாக அவரது ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
If there’s anything that you should stop wearing,it’s the weight of other people’s opinions?✌? pic.twitter.com/e9Jixl24JN
— Trish (@trishtrashers) July 3, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |