சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா.. கடித்தால் குஷியான மன்சூர் அலிகான்- அதிர்ச்சியில் பொலிஸார்!
மன்சூர் அலிகான் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என நடிகை த்ரிஷா அனுப்பிய கடிதம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றது.
த்ரிஷா
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக தன்னுடைய கட்டழகை கலையாமல் பாதுகாத்து வரும் நடிகை தான் த்ரிஷா. இவர் நடிப்பில் லியோ படம் வெளியானது.
இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹீட் படங்களில் கமிட்டாகி பிஷியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கே ஓவர்டேக் செய்யும் நடிகை த்ரிஷா என்றால் மிகையாகாது.
த்ரிஷாவுடன் லியோ படத்தில் இணைந்து நடித்த மன்சூர் அலிகான் த்ரிஷாவை தொடும் படி ஒரு சீனும் இல்லையென கவலையாக ஒரு இடத்தில் பேசியிருப்பார்.
இந்த கருத்து சமூக வலைத்தளங்களில் த்ரிஷா பற்றி ஒரு அவ பெயரை உருவாக்கியது. பின்னர் த்ரிஷாவும் இவரின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித், விஜய் இருவரும் த்ரிஷாவிற்கு சார்பாக ஒரு கருத்தையும் வெளியிடவில்லை என்பதும் வருத்ததிற்குரிய விடயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கொடுத்த அதிர்ச்சி
இந்த நிலையில் தற்போது மன்சூர் அலிகான் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா ஒரு கடிதம் அனுப்பியதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றன.
அதாவது, சர்ச்சை பேச்சிற்காக மன்சூர் அலிகானிடம் விசாரணை மேற்கொள்ள நேரில் ஆஜராகக் கூறி காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து த்ரிஷா- மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு விட்டதால் அவர் மீது எந்தவிதமான சட்டநடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கடிதம் அனுப்பியுள்ளார்.
விவகாரம் குறித்து மேலதிக விளக்கம் கேட்டு பொலிஸார் த்ரிஷாவிற்கு அனுப்பிய கடித்திற்கு பதில் கொடுக்கும் வகையில் இந்த கடித்தத்தை அனுப்பியுள்ளார்.
இந்த கடிதம் பொலிஸார் உட்பட ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி பார்த்த இணையவாசிகள், “ அது தான் த்ரிஷாவின் மனசு..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |