24 வயது காதலியை பிரிந்தாரா பப்லு - வீடியோவால் சிக்கிய அதிர்ச்சி!
24 வயது காதலியை நடிகர் பிரத்திவிராஜ் பிரிந்து விட்டாரா என்ற சந்தேகம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிரித்திவிராஜ்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகளாக மிக பிரபலமான நடிகராக இருப்பவர் பிரித்திவிராஜ்.
இவர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.
இவரை ரசிகர்கள் உட்பட சினிமா வட்டாரங்களில் உள்ளவர்கள் “பப்லு” என்று தான் அழைப்பார்கள்.
தற்போது 56 வயதாகின்றது. பிரத்திவிராஜ் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் 200 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். இந்த நிலையில், சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.
பிரிந்து விட்டார்களா?
சில வருடங்களுக்கு முன்னர் மனைவியுடன் ஏற்பட்ட வாய் தர்க்கம் காரணமாக மனைவியை விவாகரத்து செய்து விட்டு பப்லு தனிமையில் இருந்து வந்தார்.
அப்போது ஜீம்மில் ஒரு மலேசிய பெண்ணுடன் காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக வீட்டில் வசித்து வந்தார்கள். தற்போது இருவரும் பிரிந்து விட்டார்களோ என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
பப்லு நண்பர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோக்காட்சியொன்று வைரலாகி வருகின்றது. அதில் அவருடைய ஆசை காதலி ஷீத்தல் இல்லை.
மாறாக ஷீத்தலின் சமூக வலைத்தளங்களில் பப்லுவுடன் இருக்கும் வீடியோக்காட்சியை அனைத்தும் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.
இதனை கவனித்த இணையவாசிகள், “ இருவரும் பிரிந்து விட்டார்களா?” என கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |