த்ரிஷா வெளியிட்ட அடுத்த வீடியோ பார்த்தீங்களா? இன்னும் மறையாத சோகம்
நடிகை த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைக்கப்பட்டுள்ள காணொளி ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷா, தற்போது விஜய்யுடன் சேர்ந்து வெளியே சென்றுவருவதால் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகின்றார்.
ஆம் நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய்யுடன் இவர் சமீபத்தில் திருமண நிகழ்விற்கு சென்று வந்ததால், ரசிகர்களின் கேள்விக்கு ஆளாகினார்.

என்னதான் சர்ச்சை காணப்பட்டாலும் தனது வேலையில் எந்தவொரு தடையும் இல்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்து வருகின்றார்.
தற்போது இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஸ்டோரி காணொளி ரசிகர்களை அதிகமாக பேச வைத்துள்ளது.

த்ரிஷா போட்ட காணொளி என்ன?
நடிகை த்ரிஷா நாயை செல்லப்பிராணியாக வளர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். முதலில் ஜோரோ என்ற நாயை மகனாக வளர்த்து வந்த நிலையில் கடந்த 2024ம் ஆண்டு இறந்து போனது. அப்பொழுது மனமுடைந்த த்ரிஷா இனி என் வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை என்றார்.
பின்பு கடந்த ஆய்டு பிப்ரவரி மாதம் இஸ்ஸி என்ற நாயை தத்தெடுத்து மகளாக வளர்த்து வருகின்றார். என்னதான் இஸ்ஸி வந்தாலும் தனது மகனாகிய ஜோரோவை அவர் மறக்க முடியாமல் இன்னும் தவித்து வருகின்றார். இதனை அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரியே கூறுகின்றது.

அவர் வைத்துள்ள இன்ஸ்டா ஸ்டோரியில், நாய் வளர்ப்பவர்கள் மிகவும் துரதிர்ஷ்டசாலிகள். நாய்களை விட அதிகமான நாம் வாழ்வோம் என்று தெரிந்தும், 12 ஆண்டுகள் உயிர்வாழ்ந்து மரணிக்கும் நாயை நினைத்து மனமுடைந்து போவார்கள்.
மீண்டும் மீண்டும் ஹார்ட் பிரேக் ஏற்படும் என்று தெரிந்தும் கூட மறுபடியும் புதிய நாய் ஒன்றினை எடுத்து வளர்ப்பார்கள்.
நாய் இறப்பதற்கு முன்பு சொர்க்கம் எப்படியிருக்கும் என்பதை காட்ட சில நேரங்களில் இதயம் உடைந்தும் போய்விடுவார்கள் என்று கூறியுள்ளார்.
#Trisha insta stories pic.twitter.com/IsBrPowfC3
— Shameena (@shameena_111) March 24, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |